April 25, 2012

விண்டோஸ் 7ல் குறிப்புகள் எடுத்து வைப்பதற்கு

உங்களது கணணி மொனிட்டரில் குறிப்புகளை எழுதி வைப்பதற்கு விண்டோஸ் 7 இயங்குதளம் புதிய கூடுதல் வசதியை தருகிறது. இதற்கு பெரும்பாலும் அனைவரும் வேறு சில மென்பொருட்களையே பயன்படுத்தி வந்தனர். தற்போது உங்களது கணணியிலேயே ஸ்டிக்கி நோட்ஸ் வசதி கிடைப்பதால் எளிதாக இதனைப் பயன்படுத்தலாம். கணணியில் அப்ளிகேஷன் புரோகிராம்களில் இயங்கிக் கொண்டே, தொலைபேசியில் பேசுவது, இணையத்தில் தேடல் மேற்கொள்ளுதல், பேக்ஸ் அனுப்புவது போன்ற பணிகளை மேற்கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிகப் பெரிய அளவில் இது ஒரு வசதி இல்லை என்றாலும் இதனை ஒருமுறை பயன்படுத்தியவர்கள், பெரும்பாலும் இதனை நாடுகின்றனர் என்பதே இதன் சிறப்பு. இங்கு இந்த ஸ்டிக்கி நோட்ஸ் குறித்து பார்க்கலாம். கணணியிலேயே இதனை ஒருங்கிணைத்துக் கொடுப்பதால் இயக்கத்திற்கு இதனைக் கொண்டு வருவது எளிது. ஸ்டார்ட் சர்ச் பாக்ஸில் sticky என டைப் செய்திடவும். இதன் மூலம் ஸ்டிக்கி நோட்ஸ் சிறிய புரோகிராமினை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். மிக விரைவாகவும் இதனைக் கையாளலாம். இயக்கத்திற்குக் கொண்டு வந்தவுடன், ஒரு காலியாக ஸ்டிக்கி நோட், டெஸ்க்டொப்பில் காட்டப்படும். இதனை டெஸ்க்டொப்பில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். பின்னர் இதில் உங்கள் நோட்ஸை டைப் செய்திடலாம். டைப் செய்திடுகையில், அதன் தேவைக்கேற்ப இந்த நோட் விரிவடையும். இதன் எல்லையை அடைந்தவுடன் சுருளும் தோற்றத்தைப் பெறும். இருப்பினும் இதன் அளவை நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இந்த ஸ்டிக்கி நோட்டின் வண்ணத்தையும் மாற்றலாம். இதற்கு ஸ்டிக்கி நோட்டின் உள்ளாக, ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் வண்ணத்தை மாற்றலாம். புதிய ஸ்டிக்கி நோட் ஒன்று உருவாக்க, பழையதில் மேலாக இடது மூலையில் உள்ள நோட்டில் காணப்படும் + அடையாளத்தில் கிளிக் செய்திட வேண்டும். அல்லது [Ctrl]+[N] என்ற கீகளை அழுத்த வேண்டும். நோட் ஒன்றை அழிக்க, மேல் வலது மூலையில் உள்ள எக்ஸ்(“+ button”) பட்டனில் கிளிக் செய்தால் போதும். அல்லது என்ற [Ctrl]+[D] கீகளை அழுத்த வேண்டும். ஸ்டிக்கி நோட் இயக்கத்தைத் தொடங்கியவுடன், டாஸ்க் பாரில் இதற்கான பட்டன் தோன்றுவதனைக் காணலாம். இதில் கிளிக் செய்வதன் மூலம் அனைத்து ஸ்டிக்கி நோட்களையும், மினிமைஸ் செய்து வைக்கலாம். அதே போல இதன் மீது கிளிக் செய்தால் அவை இயக்கப்பட்டு திரையில் தோன்றும். நோட் ஒன்றை உருவாக்கியவுடன், அது தானாகவே சேவ் செய்யப்படும். அதாவது எங்கே எழுதி வைத்தது மீண்டும் கிடைக்காதோ என்ற பயமின்றி அதனை மூடலாம். நோட்டினை மூடி வைக்க ரைட் கிளிக் செய்து Close Window கட்டளையைத் தேர்வு செய்து கிளிக் செய்திடலாம். மீண்டும் ஸ்டிக்கி நோட் கட்டளையை இயக்குகையில், அனைத்து ஸ்டிக்கி நோட்களும் திரையில் தோன்றும். ஸ்டிக்கி நோட் தோன்றுகையில், அதன் மாறா நிலையில் உள்ள எழுத்து வகையில் இருக்கும். இதனையும் நீங்கள் விரும்பும் எழுத்து வகையில் மாற்றிக் கொள்ளலாம். ஒவ்வொரு வகை ஸ்டிக்கி நோட்டிற்கும், ஒரு எழுத்து வகையினைக் கையாளலாம். எழுத்தை மாற்ற, எந்த ஒரு முறையான வழியும் இதில் தரப்படவில்லை. எனவே நீங்கள் மாற விரும்பும் எழுத்தில் அமைக்கப்பட்ட ஒரு சொல்லினை இதில் கொப்பி செய்தால், அந்த எழுத்திலேயே தொடர்ந்து ஸ்டிக்கி நோட் அமைக்கலாம். நீங்கள் எந்த எழுத்தில் நோட் அமைக்கிறீர்களோ, அந்த எழுத்தே, மாறா நிலையில் உள்ள எழுத்தாக அமைந்திடும். தொடர்ந்து அதனையே பயன்படுத்தி டைப் செய்துவிடலாம். நோட்டில் டைப் செய்த டெக்ஸ்ட்டை, வழக்கம் போல மற்ற வேர்ட் ப்ராசசர்களில் போர்மட் செய்வது போல, அழுத்தம், சாய் வெழுத்து, அடிக்கோடு, இடது, வலது, சமமான இன்டென்ட், எழுத்து அளவினைப் பெரிதாக்குதல், சிறிதாக்குதல் என அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளலாம். அதே ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். (Ctrl+B,Ctrl+I,Ctrl+T, Ctrl+U etc.,) நோட் ஒன்றை அழிக்கையில், அது உங்களுக்கு எச்சரிக்கை செய்தியை வழங்கும். அழித்துவிடவா மீண்டும் கிடைக்காது? என்ற கேள்வியைத் தரும். சில வேளைகளில், இந்த செய்தி எல்லாம் எனக்கு வேண்டாம் என்ற விருப்பபாட்டை நாம் தேர்ந்தெடுப்போம். அப்படிப்பட்டவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. அழிக்கப்படும் ஸ்டிக்கி நோட், அவ்வளவுதான். ரீசைக்கிள் பின்னுக்கெல்லாம் எடுத்துச் செல்லப்படாது. அழித்துவிட்டால் மீண்டும் கிடைக்காது. இந்த ஸ்டிக்கி நோட் சேவ் செய்யப்பட்டு உங்களுக்கு வேண்டும் என்றால் சேவ் செய்து கொள்ளலாம். StickyNotes.snt என்ற பெயரில் இது சேவ் செய்யப்படும். இதனை C:Users{username}AppDataRoamingMicro softSticky Notes என்ற கோப்பறையில் காணலாம்.

April 19, 2012

டெஸ்க்டொப்பில் Safely Remove Hardware வசதி

இன்றைய காலகட்டத்தில் கணணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. பெரும்பாலும் பென்டிரைவில் தகவல்களை சேமித்து வைத்திருப்போம். பென்டிரைவை கணணியில் பயன்படுத்தி நீக்கும் போது, Safely Remove Hardware என்பதை கிளிக் செய்து விட்டு தான் நீக்க வேண்டும். ஆனால் நாம் சில முறை இதை மறந்து விடுவோம், இதனால் பென்டிரைவ் பழுதடைவதற்கான வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்லாமல் முக்கியமான சில கோப்புகளை இழக்கவும் வாய்ப்புள்ளது. இதற்கான காரணம் என்று பார்த்தால் அந்த Safely Remove Hardware Option ஆனது டாஸ்க் பாரின் வலது மூலையில் ஒளிந்திருக்கும், எனவே நாம் அதை கவனிப்பதில்லை. இதற்கு மாற்றாக உங்கள் Desktop-இல் நீங்கள் ரைட் கிளிக் செய்யும் போது Safely Remove Hardware என்று வரும்படி செய்யலாம். விண்டோஸ் 7ல் இதை செய்வதற்கு, Win Button +R கொடுத்து வரும் Run விண்டோவில் "regedit" என்பதை கொடுத்து ok கொடுக்கவும். பின்பு அதில் உள்ள HKEY_CLASSES_ROOT என்பதை கண்டுபிடித்து கிளிக் செய்து பின் அதில் வரும் Desktop Background Option - இல் Shell என்பதை கிளிக் செய்யவும், (அதாவது HKEY_CLASSES_ROOTDesktopBackgroundShell ) உங்களுக்கு ஓபன் ஆகும் விண்டோவில், தற்போது Shellஐ ரைட் கிளிக் செய்யுங்கள், அதில் New--> Key என்பதை கொடுத்து Safely Remove Hardware என்ற தலைப்பில் ஒரு புதிய கீயை உருவாக்கி கொள்ளுங்கள். தற்பொழுது Safely Remove Hardware -இல் Right Click செய்தால் புதிதாக ஒரு string value உருவாக்கி கொள்ள Option வரும். அதற்கு தலைப்பு icon என கொடுங்கள். icon ஐ டபிள் கிளிக் செய்யுங்கள், அதற்கு Value Data: hotplug.dll,-100 என்று கொடுங்கள். தற்பொழுது Safely Remove Hardware -இல் மறுபடி Right Click செய்து புதிதாக ஒரு Key உருவாக்கி கொள்ளுங்கள். அதற்கு தலைப்பு command என கொடுங்கள். அதன் உள்ளே மதிப்பு ஒன்று default என்ற பெயரில் இருக்கும், இதை டபுள் கிளிக் செய்து நீங்கள் அதற்கு இந்த Value கொடுக்க வேண்டும் C:WindowsSystem32control.exe hotplug.dll இதன் பின் உங்கள் Desktop-இல் நீங்கள் ரைட் கிளிக் செய்யும் போது Safely Remove Hardware என்று வரும்.

வியப்பில் ஆழ்த்தும் மைக்ரோசொப்டின் இணையம்

இன்றைய இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணையத்தளளங்கள் அறிமுகமாகி கொண்டு தான் இருக்கின்றன. அதே போன்று மைக்ரோசொப்டின் சோதனை பதிப்பில் உள்ள இணையத்தளமான Touch Effects புது வித வடிவில், அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தை ஓபன் செய்தால் புள்ளிகளுடன் ஒரு இணையதளம் வரும், அதில் உங்கள் மவுஸ் கர்சரை பயன்படுத்தி க்ளிக் செய்தும் Drag செய்தும் பாருங்கள். அங்குள்ள புள்ளிகளில் நடக்கும் ஜாலத்தை பாருங்கள். உங்களின் மவுசை திரையின் மீது வைத்து அழுத்தி இழுத்தால் அதற்கேற்ப உங்கள் திரை வண்ணமயமாக ஜொலிப்பதை காணலாம். குரோம், பயர்பாக்ஸ் மற்றும் IE உலவிகளில் நன்றாக வேலை செய்கிறது. http://ie.microsoft.com/testdrive/Graphics/TouchEffects/

RAM கணணியின் வேகத்தை அதிகரிப்பத​ற்கு

கணணியின் வன்றட்டில் அதிகளவு கோப்புக்களை சேமித்தல், அளவிற்கு அதிகமான மென்பொருட்களை நிறுவுதல் போன்ற செயற்பாடுகளால் RAM கணணியின் வேகம் குறைவடையும். இவை தவிர ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பயனற்ற மென்பொருள் பிரயோகங்களை திறந்து வைத்திருப்பதன் மூலமும் RAM கணணியின் வேகம் குறைவடைகின்றது. இதற்குக் காரணம் திறந்த நிலையில் உள்ள மென்பொருட்கள் RAMன் இடத்தை நிரப்புவதாகும். ஆகவே இவ்வாறு திறந்த நிலையில் இருக்கும் மென்பொருட்களை பாவனையற்ற சந்தர்ப்பங்களில் Minimize செய்வதன் மூலம் RAMல் இடம் குறிப்பிட்ட அளவு காலியாகி கணணியின் வேகம் அதிகரிக்கின்றது. இதனைப் பரிசோதிக்கும் பொருட்டு 1. MS Word பிரயோக மென்பொருளை திறக்கவும். 2.CTRL+SHIFT+ESC ஆகிய கீக்களை அழுத்துவதன் மூலம் Windows Task Managerஐ Open செய்ய வேண்டும். அதில் Process என்பதை அழுத்தி WINWORD.EXEன் Mem Usageஐ தெரிந்து கொள்ளலாம். 3.இப்போது MS Wordஐ Minimize செய்து மீண்டும் WINWORD.EXEன் Mem Usageஐ சரிபார்க்கவும். முன்னைய அளவை விடவும் தற்போது குறைவாகவே காணப்படும். எனவே தற்காலிகமாக பயனற்ற மென்பொருட்களை Minimize செய்வதன் மூலம் கணணி RAMன் வேகத்தை அதிகரிக்க முடியும்.

April 11, 2012

Remove Windows Genuine Notification

I recently again came up with the situation that Windows Genuine Notification popped up because Windows Update again installed it via Automatic Updates. It pops up while a user logs in to windows, displays a message near the system tray and keeps on reminding you in between work that the copy of windows is not genuine. It has been reported since its first release that even genuine users are getting this prompt, so Microsoft has them self release instructions for its removal. When I searched on Google about this issue, I landed up on pages which were providing many methods of its removal including those patching up existing files with their cracked versions which I would highly recommend avoiding them as they might contain malicious code and can be used to get you into more trouble. I found out this method of removal of Windows Genuine Notification : Launch Windows Task Manager. End wgatray.exe process in Task Manager. Restart Windows XP in Safe Mode. Delete WgaTray.exe from C:\Windows\System32. Delete WgaTray.exe from C:\Windows\System32\dllcache. Launch RegEdit. Browse to the following location: HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Winlogon\Notify Delete the folder WgaLogon and all its contents Reboot Windows XP. But the latest version of the WGN tool is a little tricky to handle. It will pop up again as soon as you end it from the task manager and while it is running in the memory, you can’t delete it too. Here is how I did it : Ignore Step #2 of ending wgatray.exe before restarting to Safe Mode as it serves no purpose. At Step #4, wait on the deletion confirmation dialog box and then open task manager to end wgatray.exe When you are again prompted for a confirmation for terminating the process, align that confirmation box over the delete confirmation box. Press Yes on the Task Manager prompt and then quickly press Yes on the deletion confirmation. (You need to repeat this if you miss it) If you did it quickly then you will be able to delete the file. Step #5 can be missed. I was able to do it without the Step #5. Complete Step 6 to 9 as instructed. After you have followed all the above instructions, then Go to Control Panel > Security Center > Automatic Update Settings. Select the third option “Notify me but don’t automatically download or install them“. Click Ok. Now when Windows Updates icon will appear in the system tray (it will take some time), click on the icon and it will display a list of available updates. This time unselect the checkbox of Windows Genuine Advantage Notification Tool, and click on Download. Select “Don’t notify my about these updates again” so it will ignored every time updates are downloaded. From the next time, make sure to check the list of download so that you might not install any new version of this tool.