April 11, 2013

Android Mobile Phone இன் வேகத்தினை அதிகரிப்பதற்கு


 


Android Mobile Phone வழியாக இணையத்தை பயன்படுத்துபவர்கள் தற்போது அதிகரித்துள்ளது. தொடர்ந்து இணையத்தைப் பயன்படுத்தும் போது அதன் History மற்றும் Cookies தேங்கிக் காணப்படும். ஆகவே அதனை உடனுக்குடன் நீக்குவதன்
மூலம் இணைய வேகத்தைக் கூட்ட முடியும். Memoryஐ சுத்தபடுத்தும் நூற்றுக்கும் மேற்பட்ட அப்ளிக்கேஷன்கள் இலவசமாகவே கிடைக்கின்றன.
தேவையில்லாமல் இயங்கும் மென்பொருள்களை நிறுத்தி, சுத்தபடுத்தி, மொபைலை வேகப்படுத்தும் பயனுள்ள அருமையான மிக சிறந்த அப்ளிக்கேஷன் பற்றி பார்ப்போம். கணினியில் சிறப்பாக செயல்பட்டு கணினியை வேகப்படுத்தும் Advance System Care தற்போது மொபைல் போன்களுக்காக Advanced Mobile Care என்ற பெயரில் இலவசமாக கிடைக்கிறது.
Download link:
https://play.google.com/store/apps/details?id=com.iobit.mobilecare&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5pb2JpdC5tb2JpbGVjYXJlIl0
சுத்தபடுத்தும் வேலை மட்டுமல்லாது Game Booster, Battery Server, Application Manager மற்றும் அவசியமான (Privacy Locker) போட்டோ, வீடியோ, பைல்களை மறைத்து வைக்க என்று பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. Android Mobile Phone வைத்திருப்பவர்கள் அவசியம் பயன்படுத்த வேண்டிய மென்பொருளாகும்
மேலுள்ள Screen shots களினைப் பார்க்கும் போதே அதன் பயன்பாடுகள் பற்றி உங்களுக்கு புரிந்திருக்கும். உங்கள் Android Mobile Phone இல் இதனை நிறுவிக் கூடிய பயனைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

இந்த பதிவு பயனுள்ளது என கருதியினால் இது மேலும் பலருக்கு பயனளிக்க வேண்டும் என கருதினால் கீழே சென்று வாக்களிக்கவும்...says something like