
11/14/2009 -சீனாவின் குவாங்சூ நகரத்தில் 18வது ஆசிய மெய்வல்லுனர்; போட்டிகள் கடந்த 9ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன. இதில் இலங்கையின் மஞ்சுல குமார விஜயசேகர என்பவர் நேற்று நடைபெற்ற ஆடவர்களுக்கான உயரம் பாயும் போட்டியில் இலங்கைக்கு முதன் முதலாக தங்கப் பதக்கம் ஒன்றை பெற்றுக் கொடுத்துள்ளார். 2.10 மீற்றர் உயரத்தை தெரிவு செய்து பாய்வதற்கு ஆரம்பித்த விஜயசேகர 2.26 மீற்றர் உயரத்தையும் பாய்வதற்கு முயற்சி செய்து ஒருமுறை பவுலாகியதை தொடர்ந்து, 2.23 மீற்றர் உயரத்தை பாய்ந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இது குறித்து விஜயசேகர தெரிவிக்கையில், நான் இந்த உயரத்தை பாய்ந்து வெற்றிபெற்றதில் கூடிய மனஈடுபாடு இல்லை. இருப்பினும் தங்கபதக்கத்தை வென்றதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி .எனது இலக்கு 2.27 மீற்றர் உயரம் பாய்வதாகும் என்றார். இலங்கையை சேர்ந்த விஜயகோன் ஆடவர்களுக்கான 1500 மீற்றர் ஓட்ட போட்டியில் ஏற்கனவே வெண்கல பதக்கத்தை இலங்கைக்கு பெற்றுகொடுத்துள்ளதோடு, உயரம் பாயும் போட்டியில் விஜயசேகர தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார். பதினேழு நாடுகள் பங்கேற்கும் இப்போட்டிகளில்,இரண்டு பதக்கங்களுடன் இலங்கை 11 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment
இந்த பதிவு பயனுள்ளது என கருதியினால் இது மேலும் பலருக்கு பயனளிக்க வேண்டும் என கருதினால் கீழே சென்று வாக்களிக்கவும்...says something like