>>>Online IT Solutions and IT Professional Services & Support <<<<அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம் தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
June 13, 2011
சீடிக்களைத் தயாரிப்பதற்கு
சீடி மற்றும் டிவிடிக்களைத் தயாரிப்பதற்கான மென்பொருள் அப்ளிகேஷன்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன.
பல்வேறு அம்சங்களுடன் கூடிய சீடி பர்னர் பதிப்பு(ver. 4.3.8) இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. இதனை தரவிறக்கம் செய்து நேரடியாக உங்கள் கணணியில் நிறுவச் செய்திடலாம். மற்ற சீடி பர்னர்களைக் காட்டிலும் இது நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. இதில் எந்த விதமான விளம்பர புரோகிராம்கள் அல்லது கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களோ இணைந்து வருவதில்லை.
கணணியில் இதனை நிறுவச் செய்து இயக்கியவுடன் தொடக்க திரையில் ஐந்து பட்டன்கள் உள்ளன. அவை Data Disc, Audi Disc, Burn ISO image, Copy Disc and Erase Disc. இவைகள் தேர்ந்தெடுக்க தரப்பட்டிருக்கும் இன்டர்பேஸ் ஆகும்.
இதில் எது உங்கள் வேலைக்குச் சரியான பட்டனோ அதனைக் கிளிக் செய்திடவும். எடுத்துக் காட்டாக நீங்கள் தகவல் கோப்புக்களைக் கொண்டு சீடி உருவாக்கப்போகிறீர்கள் என்றால் இதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உடன் கிடைக்கும் விண்டோவில் மேலும் இரு பட்டன்கள் உள்ள ஓப்ஷன் திரை கிடைக்கும்.
பின் அதன் வழியே சென்றால் எளிதாக சீடி பர்ன் செய்யலாம். இந்த புரோகிராமினை விண்டோஸ் 2000ல் தொடங்கி இன்றைய விஸ்டா ஓபரேட்டிங் சிஸ்டங்கள் வரையில் இயக்கலாம். இதனை இன்ஸ்டால் செய்திடும் முன் உங்கள் சிஸ்டத்தில் .net framework இருப்பதனை உறுதி செய்திடுங்கள். இது இல்லை என்றால் இந்த புரோகிராம் சரியாகச் செயல்படுவதில்லை.
கண்களுக்கு கட்டுப்படும் கணணி
கண்களை பயன்படுத்தி கணனியை இயக்குவதென்பது கண்களுக்கு ஒரு அதிசயம் என்பதோடு உங்கள் கண்களுக்கு ஏற்படக்கூடிய குறைபடுகளையும் இது குறைக்கிறது. அத்துடன் கணனியை இயக்க கண்களை பயன்படுத்துவதென்பது மவுஸை பயன்படுதுவதை விட இலகுவனதாக அமைகிறது.
Tobii Technology நிறுவனம் இந்த கண்களால் கட்டுப்படுதும் உலகின் முதலாவது மடிக்கணினியை அறிமுகம் செய்திருக்கிறது. இது இந் நிறுவனத்துடனான உருவனது. இது மார்ச் 1-5 வரை ஹனோவரில் நடை பெற்ற நிகழ்வில் கட்சிப்படுத்தப்பட்டது. இம் மடிக்கணணி ஒரு கணினியை கட்டுப்படுத்துவதற்கன அதிக பயன் விளைவான வழியை கொண்டுவருவதை இலக்காக கொண்டுள்ளது. இந்த வழியில் பயன்பட்டாளார்கள் கணணித்திரையில் ஒரு குறியீட்டை அல்லது கருவியை நோக்கியவுடன் முன்னையை விட அதிக தகவல் கட்சிப்படுத்தப்படும். அத்துடன் நீங்கள் படங்கள் அல்லது நிலவரை படங்களை மாறு உருப்பெருக்கம் செய்து பார்வையிட முடியும். மேலும் நீங்கள் பார்க்கும் பகுதியின் மையப்பகுதிக்கு தன்னியக்கமாகவே போக முடியும். உங்கள் கண்கள் எங்கே பார்க்கின்றன என்று தெரிந்து கொள்ளும் இயலுமையும் கணினிக்கு இருக்கும். இதன் பயனாக கண்கள் திரையைப்பார்க்காத வேளையில் கணணயின் திரையை மங்கச்செய்யவும் முடியும்.
தற்போது மனிதன் தன் கண் பார்வையாலேயே கட்டுப்படுத்தி இயக்கும் மடி கணணி வந்து விட்டது. இந்த புதிய வகை மடி கணணியின் திரை, இயக்கும் நபரின் கண்பார்வைக்கு கட்டுப்படுகிறது. திரையில் ஒரு பகுதியை வாசித்து முடித்தவுடனே, கண் பார்வை இறங்குவதற்கேற்ப அடுத்த பகுதிக்கு தானாகவே Scroll ஆகி (கீழிறங்கி) செல்லும் வகையில் இந்த லேப்டாப் (Laptop) வடிவமைக்கப் பட்டுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப் பட்டிருக்கும் ஐ ட்ராக்கர் (Eye Tracker), லேப்டாப் பயன் படுத்துபவர்களின் விழிகளுக்கு இன்ஃப்ரா ரெட் கதிர்களைப் (Infrared rays) பாய்ச்சுகிறது. இரண்டு துல்லியமான கேமராக்கள் விழிகளின் அசைவுகளையும் விழித் திரைகளின் (Retina) பிம்பங்களையும் பதிந்துக் கொள்ளும். இதன் மூலமே கண்களால் கணணி செயல்படும் விந்தை நடக்கிறது.
விண்டோஸ் 7 இயங்குதளத்தை விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கு மாற்ற
மேம்படுத்தப்பட்ட பயனர் இடைமுகம், வேகமான லோடிங், கண்ணைக் கவரும் பயன்பாடுகள் என இதன் வசதிகள் அதிகம்.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பாக விண்டோஸ் 8ஐ அறிவித்துள்ளது. அடுத்த வருடத்தில் இந்த பதிப்பு வெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு முன்பாகவே விண்டோஸ் 8 இயங்குதளத்தின் வசதிகள் எவ்வாறு இருக்கும் என்பதனை Transformation Pack ஆக உருவாக்கி விட்டார்கள்.
Transformation Pack என்பது ஒரு இயங்குதளம் அல்ல. குறிப்பிட்ட இயங்குதளத்தைப் போல தோற்றத்தையும் பயனர் இடைமுகத்தையும்(Graphical User Interface) தற்போதுள்ள இயங்குதளத்திற்குத் தருகிறது.
மேலும் இது ஒரு இயங்குதளத்தின் அப்டேட் அல்ல. இதைப் போட்டால் இயங்குதளம் அப்டேட் செய்யப்படாது என்பதையும் அறிய வேண்டும். இந்த மென்பொருள்களின் மூலம் தற்போதுள்ள இயங்குதளத்திலிருந்து எந்த ஒரு இயங்குதளத்தின் தோற்றத்தைப் போலவும் மாற்ற முடியும். ( Windows to Linux distributions, Mac Os) இந்த மென்பொருளை நீக்கிவிட்டால் பழைய தோற்றம் கிடைத்துவிடும்.
விண்டோஸ் 8 இன் தோற்றத்தை அதன் பதிப்பு வெளியிடப்படும் வரை காத்திருக்காமல் உங்கள் கணணியில் காண்பதற்கு ஆசையிருந்தால் இதன் மூலம் பயன்படுத்தலாம்.
இதை நிறுவும் முன் உங்கள் கணிணியில் இருக்க வேண்டியவைகள்:
1. கணிணியின் இயங்குதளம் விண்டோஸ் 7 Service Pack1 ஆக இருக்க வேண்டும்.
2. இந்த மென்பொருள் 32 bit மற்றும் 64 bit இரண்டிலும் செயல்படும். இருந்தாலும் 32 பிட்டில் சிறப்பாக செயல்படும்.
3. கணணியில் டாட் நெட் பிரேம்வொர்க்( Dot Net Framework 4.5 ) நிறுவப்பட்டிருக்க வேண்டும். இதனை நிறுவும் முன்னர் கணணியில் System Restore point அமைத்துக் கொள்வது நல்லது. இதற்கு Control panel -> System->System Protection->Create செல்லவும். நிறுவிய பின்னர் எதேனும் சிக்கல் என்றால் எளிதாக மீட்டுக் கொள்ள முடியும்.
இணையத்தில் இருந்த படியே அனைத்து புத்தகங்களையும் படிப்பதற்கு
இரட்டிப்பு ஆனந்தம் என்பார்களே அப்படி ஒரு ஆனந்தத்தை புத்தக பிரியர்களுக்கு தரக்கூடிய இணையதளமாக "ரீட் எனி புக்" என்ற தளம் உள்ளது.
பெயருக்கேற்ப எந்த புத்தகத்தையும் படிக்க வழி செய்கிறது இந்த தளம். புத்தக பிரியர்களுக்காக என்று பிரத்யேக இணையதளங்கள் பல இருக்கின்றன. வெறுமனே புத்தகங்களை பட்டியலிடாமல் ரசனையின் அடிப்படையில் நமக்கு பிடிக்க கூடிய புதிய புத்தகங்களை பரிந்துரைக்கும் அருமையான தளங்களும் இருக்கின்றன.
அதே போல இணையத்தில் இபுக் வடிவில் கிடைக்க கூடிய புத்தகங்களை தேட உதவும் தளங்களுமிருக்கின்றன. இலவச இபுக்களை அடையாளம் காட்டும் தளங்களையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.
இந்த தளத்தில் உங்களுக்கு பிடித்தமான புத்தகத்தை தேர்வு செய்து அந்த புத்தகத்தை அப்படியே இபுக்காக படிக்கலாம். இதற்காக தனியே எந்த மென்பொருளையும் தரவிறக்கம் செய்ய வேண்டாம்.
படிக்கப் போகும் புத்தகத்தை கூட தரவிறக்கம் செய்ய வேண்டாம். புத்தகத்தை தேர்வு செய்த பின் அதில் ஒரே ஒரு கிளிக் செய்தால் போதும் அந்த புத்தகத்தை படித்து விடலாம். அதற்கான ரீடர் அதே பக்கத்தில் தோன்றுகிறது. எனவே பிரவுசரை விட்டு வெளியே செல்லவும் தேவையில்லை.
பக்கங்களை திருப்புவது போல ஒவ்வொரு பக்கமாக கிளிக் செய்து படித்துக் கொண்டே இருக்கலாம். தேவை என்றால் ரீடரை மட்டும் பெரிதாகி படிக்கும் வசதியும் உள்ளது. புத்தகங்கள் எதிர்பார்க்க கூடியது போல தனித்தனி தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.
பட்டியலை கூட பார்க்க வேண்டாம் நமக்கு தேவையான புத்தகத்தை குறிப்பிட்டு தேடவும் முடியும். அதே போல மற்றவர்கள் படிக்கும் புத்தகங்களையும் ஒரு பார்வை பார்த்து எல்லோரும் படிப்பதை படித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு புத்தகம் பற்றிய சுருக்கமான அறிமுகத்தோடு அவற்றின் வகை குறிப்பிடப்பட்டு அத்தியாயம் அத்தியாமாக ரீடரில் புத்தகம் விரிவது புத்தக பிரியர்களுக்கு உண்மையிலேயே பரவசமா்ன அனுபவம். நல்ல புத்தகம் என்றால் ஒரே மூச்சில் கூட வாசித்து விடலாம். புதிய புத்தகம் என்றால் எப்படி இருக்கிறது என்று சில பக்கங்களை புரட்டி பார்க்கலாம்.
புத்தகங்களை தரவிறக்கம் செய்வதும் அவற்றின் கோப்பு அளவும் சோதனையாக அமையலாம் என்னும் போது ஒரே பக்கத்திலேயே ஒரே கிளிக்கிலேயே புத்தகத்தை படிப்பது என்பது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விடயம் தான்.
விண்டோஸ் ஓபரேடிங் சிஸ்டத்தை லாக் செய்வதற்கு
கணணி பயன்பாட்டு தேவைக்கு வெளியிடப்படும் மென்பொருள்கள் அனைத்துமே விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தை சார்ந்தே உள்ளது. இதற்கு காரணம் கணணி பயனாளர்கள் பெருமளவில் விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்துவதே காரணம் ஆகும்.
இவ்வாறு அதிகளவில் பயன்படுத்தப்படும் ஓபரேட்டிங் சிஸ்டத்தில் பெருமளவு குறைபாடுகள் உள்ளன. இதில் முக்கியமான குறை என்னவெனில் விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தை லாக் செய்யும் வசதி இல்லை.
பொதுவாக பயனர் கணக்கு துவங்கி கடவுச்சொல் இட்டு பயன்படுத்தி வருவோம். இதுபோன்று பயன்படுத்தினால் பிரச்சினை இல்லை. ஆனால் கடவுச்சொல் உருவாக்காமல் இருந்தால் என்ன ஆகும்.
அந்த கணணியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். அந்த கணணிக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. அவ்வாறு உள்ள கணணிகளில் கோப்புகள், கோளன்களை மறைத்து வைத்து பயன்படுத்தி வருவோம். சில நேரங்களில் ஓபரேட்டிங் சிஸ்டத்தையே பிறர் பயன்படுத்தாதவாறு செய்ய நினைப்போம்.
அதுபோன்று ஓபரேட்டிங் சிஸ்டத்தினை லாக் செய்ய சில மென்பொருள்கள் உதவி செய்கிறன. அந்த வகையில் நமக்கு உதவி செய்யும் மென்பொருள்தான் WinLockr.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து மென்பொருளை ஒப்பன் செய்யவும். இந்த WinLockr அப்ளிகேஷனானது போர்டபிள் அப்ளிகேஷன் ஆகும். பின் விருப்பமான கடவுச்சொல்லை உள்ளடவும்.
கடவுச்சொல்லை உள்ளிட்டு பின் எந்த போர்மட்டில் இயங்குதளத்தை லாக் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். கடவுச்சொல் மற்றும் USB என்ற இரு வேறுபட்ட முறைகளில் லாக் செய்ய முடியும். அடுத்து Lock windows என்னும் பொத்தானை அழுத்தவும். அவ்வளவுதான் விண்டோஸ் இயங்குதளமானது லாக் செய்யப்படும்.
நீங்கள் கடவுச்சொல் இட்டு இயங்குதளத்தை லாக் செய்தால் கடவுச்சொல் இட்டால் மட்டுமே ஒப்பன் செய்ய முடியும். USB மூலமாக லாக் செய்தால் USBயை அகற்றினால் மட்டுமே இயங்குதளத்தை பயன்படுத்த முடியும்.
இவ்வாறு விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தை லாக் செய்வதன் மூலமாக பிறர் நமது கணணியை திருட்டுதனமாக அனுகுவதை தடுக்க முடியும். இதில் முக்கியமான விடயம் என்னவெனில் USB ட்ரைவினை பயன்படுத்தினால் மட்டுமே லாக் செய்ய முடியும்.
கணணியை முழுவதுமாக தமிழில் மாற்றுவதற்கு
உங்கள் கணணியை முற்று முழுதாகவே தமிழில் மாற்ற நம்மில் பலருக்கு ஆசை
இருக்கலாம். ஆனால் எவ்வாறு மாற்றுவது? அதற்கு எவ்வாறான மென்பொருட்கள் தேவை? இது இலவசமாக கிடைக்குமா? என்பது பலரின் எதிர்பார்ப்பு. உங்களிடம் BitLocker குறியாக்கம் செயல்படுத்தப்பட்டிருந்தால் LIPஐ நிறுவுவதற்கு முன் அதை இடைநிறுத்தி வைக்கவும். Control Panelஐ திறந்து System and Security என்பதைத் தேர்ந்தெடுத்த பின், BitLocker Drive Encryption என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Suspend Protection என்பதைக் கிளிக் செய்யவும்.
Windows 7 LIPஇன் 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புகளின் பதிவிறக்கங்கள் தனித்தனியே கிடைப்பதால் பதிவிறக்கத்தைத் தொடங்குவதற்கு முன் Windows 7இன் எந்த பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
Windows 7இன் எந்த பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை பின்வருமாறு தீர்மானிக்கலாம்: Start பொத்தானைக் கிளிக் செய்த பின் கணணி என்பதில் வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கணணி குறித்த அடிப்படைத் தகவலை இது காண்பிக்கும்.
அமைப்பு வகைக்கு, அமைப்பு என்ற பிரிவைப் பார்க்கவும். உங்கள் Windows 7 இயக்க முறைமை, 32 பிட் இயக்க முறைமையா அல்லது அது 64 பிட் இயக்க முறைமையா என்பதை இது காட்டும். 32 பிட் பதிப்பை நிறுவ நீங்கள் இவற்றை செய்யலாம்:
குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று தகவலிறக்கம் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும், பின்னர் LIP -ஐ நிறுவ Open என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தகவலிறக்கம் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும், கோப்பை உங்கள் கணணிக்கு நகலெடுக்க Save என்பதைக் கிளிக் செய்யவும்.
LIPஐ நிறுவ பதிவிறக்கிய கோப்பிற்கு சென்று அதை இரு முறை கிளிக் செய்யவும். 64 பிட் பதிப்பை நிறுவ மேலே உள்ள இரண்டாவது விருப்பத்தையே நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)