>>>Online IT Solutions and IT Professional Services & Support <<<<அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம் தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
June 13, 2011
கணணியை முழுவதுமாக தமிழில் மாற்றுவதற்கு
உங்கள் கணணியை முற்று முழுதாகவே தமிழில் மாற்ற நம்மில் பலருக்கு ஆசை
இருக்கலாம். ஆனால் எவ்வாறு மாற்றுவது? அதற்கு எவ்வாறான மென்பொருட்கள் தேவை? இது இலவசமாக கிடைக்குமா? என்பது பலரின் எதிர்பார்ப்பு. உங்களிடம் BitLocker குறியாக்கம் செயல்படுத்தப்பட்டிருந்தால் LIPஐ நிறுவுவதற்கு முன் அதை இடைநிறுத்தி வைக்கவும். Control Panelஐ திறந்து System and Security என்பதைத் தேர்ந்தெடுத்த பின், BitLocker Drive Encryption என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Suspend Protection என்பதைக் கிளிக் செய்யவும்.
Windows 7 LIPஇன் 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புகளின் பதிவிறக்கங்கள் தனித்தனியே கிடைப்பதால் பதிவிறக்கத்தைத் தொடங்குவதற்கு முன் Windows 7இன் எந்த பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
Windows 7இன் எந்த பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை பின்வருமாறு தீர்மானிக்கலாம்: Start பொத்தானைக் கிளிக் செய்த பின் கணணி என்பதில் வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கணணி குறித்த அடிப்படைத் தகவலை இது காண்பிக்கும்.
அமைப்பு வகைக்கு, அமைப்பு என்ற பிரிவைப் பார்க்கவும். உங்கள் Windows 7 இயக்க முறைமை, 32 பிட் இயக்க முறைமையா அல்லது அது 64 பிட் இயக்க முறைமையா என்பதை இது காட்டும். 32 பிட் பதிப்பை நிறுவ நீங்கள் இவற்றை செய்யலாம்:
குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று தகவலிறக்கம் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும், பின்னர் LIP -ஐ நிறுவ Open என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தகவலிறக்கம் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும், கோப்பை உங்கள் கணணிக்கு நகலெடுக்க Save என்பதைக் கிளிக் செய்யவும்.
LIPஐ நிறுவ பதிவிறக்கிய கோப்பிற்கு சென்று அதை இரு முறை கிளிக் செய்யவும். 64 பிட் பதிப்பை நிறுவ மேலே உள்ள இரண்டாவது விருப்பத்தையே நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
இந்த பதிவு பயனுள்ளது என கருதியினால் இது மேலும் பலருக்கு பயனளிக்க வேண்டும் என கருதினால் கீழே சென்று வாக்களிக்கவும்...says something like