>>>Online IT Solutions and IT Professional Services & Support <<<<அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம் தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
June 13, 2011
இணையத்தில் இருந்த படியே அனைத்து புத்தகங்களையும் படிப்பதற்கு
இரட்டிப்பு ஆனந்தம் என்பார்களே அப்படி ஒரு ஆனந்தத்தை புத்தக பிரியர்களுக்கு தரக்கூடிய இணையதளமாக "ரீட் எனி புக்" என்ற தளம் உள்ளது.
பெயருக்கேற்ப எந்த புத்தகத்தையும் படிக்க வழி செய்கிறது இந்த தளம். புத்தக பிரியர்களுக்காக என்று பிரத்யேக இணையதளங்கள் பல இருக்கின்றன. வெறுமனே புத்தகங்களை பட்டியலிடாமல் ரசனையின் அடிப்படையில் நமக்கு பிடிக்க கூடிய புதிய புத்தகங்களை பரிந்துரைக்கும் அருமையான தளங்களும் இருக்கின்றன.
அதே போல இணையத்தில் இபுக் வடிவில் கிடைக்க கூடிய புத்தகங்களை தேட உதவும் தளங்களுமிருக்கின்றன. இலவச இபுக்களை அடையாளம் காட்டும் தளங்களையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.
இந்த தளத்தில் உங்களுக்கு பிடித்தமான புத்தகத்தை தேர்வு செய்து அந்த புத்தகத்தை அப்படியே இபுக்காக படிக்கலாம். இதற்காக தனியே எந்த மென்பொருளையும் தரவிறக்கம் செய்ய வேண்டாம்.
படிக்கப் போகும் புத்தகத்தை கூட தரவிறக்கம் செய்ய வேண்டாம். புத்தகத்தை தேர்வு செய்த பின் அதில் ஒரே ஒரு கிளிக் செய்தால் போதும் அந்த புத்தகத்தை படித்து விடலாம். அதற்கான ரீடர் அதே பக்கத்தில் தோன்றுகிறது. எனவே பிரவுசரை விட்டு வெளியே செல்லவும் தேவையில்லை.
பக்கங்களை திருப்புவது போல ஒவ்வொரு பக்கமாக கிளிக் செய்து படித்துக் கொண்டே இருக்கலாம். தேவை என்றால் ரீடரை மட்டும் பெரிதாகி படிக்கும் வசதியும் உள்ளது. புத்தகங்கள் எதிர்பார்க்க கூடியது போல தனித்தனி தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.
பட்டியலை கூட பார்க்க வேண்டாம் நமக்கு தேவையான புத்தகத்தை குறிப்பிட்டு தேடவும் முடியும். அதே போல மற்றவர்கள் படிக்கும் புத்தகங்களையும் ஒரு பார்வை பார்த்து எல்லோரும் படிப்பதை படித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு புத்தகம் பற்றிய சுருக்கமான அறிமுகத்தோடு அவற்றின் வகை குறிப்பிடப்பட்டு அத்தியாயம் அத்தியாமாக ரீடரில் புத்தகம் விரிவது புத்தக பிரியர்களுக்கு உண்மையிலேயே பரவசமா்ன அனுபவம். நல்ல புத்தகம் என்றால் ஒரே மூச்சில் கூட வாசித்து விடலாம். புதிய புத்தகம் என்றால் எப்படி இருக்கிறது என்று சில பக்கங்களை புரட்டி பார்க்கலாம்.
புத்தகங்களை தரவிறக்கம் செய்வதும் அவற்றின் கோப்பு அளவும் சோதனையாக அமையலாம் என்னும் போது ஒரே பக்கத்திலேயே ஒரே கிளிக்கிலேயே புத்தகத்தை படிப்பது என்பது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விடயம் தான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
இந்த பதிவு பயனுள்ளது என கருதியினால் இது மேலும் பலருக்கு பயனளிக்க வேண்டும் என கருதினால் கீழே சென்று வாக்களிக்கவும்...says something like