June 13, 2011

சீடிக்களைத் தயாரிப்பதற்கு





சீடி மற்றும் டிவிடிக்களைத் தயாரிப்பதற்கான மென்பொருள் அப்ளிகேஷன்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன.
பல்வேறு அம்சங்களுடன் கூடிய சீடி பர்னர் பதிப்பு(ver. 4.3.8) இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. இதனை தரவிறக்கம் செய்து நேரடியாக உங்கள் கணணியில் நிறுவச் செய்திடலாம். மற்ற சீடி பர்னர்களைக் காட்டிலும் இது நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. இதில் எந்த விதமான விளம்பர புரோகிராம்கள் அல்லது கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களோ இணைந்து வருவதில்லை.

கணணியில் இதனை நிறுவச் செய்து இயக்கியவுடன் தொடக்க திரையில் ஐந்து பட்டன்கள் உள்ளன. அவை Data Disc, Audi Disc, Burn ISO image, Copy Disc and Erase Disc. இவைகள் தேர்ந்தெடுக்க தரப்பட்டிருக்கும் இன்டர்பேஸ் ஆகும்.

இதில் எது உங்கள் வேலைக்குச் சரியான பட்டனோ அதனைக் கிளிக் செய்திடவும். எடுத்துக் காட்டாக நீங்கள் தகவல் கோப்புக்களைக் கொண்டு சீடி உருவாக்கப்போகிறீர்கள் என்றால் இதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உடன் கிடைக்கும் விண்டோவில் மேலும் இரு பட்டன்கள் உள்ள ஓப்ஷன் திரை கிடைக்கும்.

பின் அதன் வழியே சென்றால் எளிதாக சீடி பர்ன் செய்யலாம். இந்த புரோகிராமினை விண்டோஸ் 2000ல் தொடங்கி இன்றைய விஸ்டா ஓபரேட்டிங் சிஸ்டங்கள் வரையில் இயக்கலாம். இதனை இன்ஸ்டால் செய்திடும் முன் உங்கள் சிஸ்டத்தில் .net framework இருப்பதனை உறுதி செய்திடுங்கள். இது இல்லை என்றால் இந்த புரோகிராம் சரியாகச் செயல்படுவதில்லை.

No comments:

Post a Comment

இந்த பதிவு பயனுள்ளது என கருதியினால் இது மேலும் பலருக்கு பயனளிக்க வேண்டும் என கருதினால் கீழே சென்று வாக்களிக்கவும்...says something like