>>>Online IT Solutions and IT Professional Services & Support <<<<அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம் தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
February 24, 2010
February 18, 2010
E-MAIL SERVICE
Today free webmail services have offered many interesting features and also security features. They can block spams, check for viruses and trojans, and keep your inbox clean from phishing e-mail. However, not every free webmail services are safe! And not every services offered the same features. So, which one is better? This comparison table will show you before you make a decision to use one of them as your main webmail service. In this section, we will see some comparisons between 5 free familiar webmail services, they are GMail (by Google), AOL,Windows Live Hotmail (by Microsoft), Yahoo! Mail, and Lycos (formerly MailCity and EudoraMail). We will compare the offered features, security aspects, and usability. Then in the next section we will check every webmail service with their detailed information.
WINDOWS XP
Remove Label from Your Desktop Icons
February 17, 2010
February 15, 2010
How to Calculate Data Transfer Rate
01.Determine the size of the object being transferred. For this example, let's say you're downloading an online video. In your web browser's download box, beneath the name of the video, it should say the video size. Let's say this video is 100 megabytes (MBs).
February 14, 2010
விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்...
விண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும், சிறிது கூடக் குறையக் கூடாது என்பதுதான் நம் விருப்பமாக எந்தக் காலத்திலும் உள்ளது. தொடக்கத்தில் உள்ள ஒரு சிஸ்டத்தின் வேகம் போகப் போகக் குறைவது பலருக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. இதில் இந்த சிஸ்டங்களைப் பயன்படுத்துபவர்களின் கவனக் குறைவும் உள்ளது. அவையும் சேர்ந்தே சிஸ்டத்தின் வேகக் குறைவிற்குக் காரணமாய் அமைந்துள்ளது. ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் நிச்சயம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை புயல் வேகத்தில் இயங்க வைக்கலாம் என்பதே உண்மை. அந்த சில நடவடிக்கைகளை இங்கு காணலாம். இந்த நடவடிக்கை குறித்த டிப்ஸ்கள், சிஸ்டம் வடிவமைப்பவர்கள், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள், நெட்வொர்க் அட்மினிஸ்ட் ரேட்டர் மற்றும் ஹெல்ப் டெஸ்க் வல்லுநர்கள் எனப் பலரிடம் திரட்டியவை. நீங்களும் இவற்றை முயற்சித்துப் பாருங்களேன். 1. ஹார்ட் டிஸ்க்கின் சுழற்சி, அதன் மூலம் பைல் தேடும் நேரம் ஆகியவை சிஸ்டம் இயங்குவதில் முக்கிய இடத்தைக் கொள்கின்றன. எனவே சிதறலாகப் பதிந்த பைல்களை ஒருமுகப்படுத்தும் டிபிராக் செயல்பாட்டினை மேற்கொள்ளுங்கள். விண்டோஸ் இணைந்து வரும் டிபிராக் பைல் அல்லது ஸ்மார்ட் டிபிராக் (SmartDefrag) போன்ற மற்றவர்கள் தந்துள்ள புரோகிராம்களை இதற்குப் பயன்படுத்தலம.ஹார்ட் டிஸ்க் என்று பொதுவாக இல்லாமல் விண்டோஸ் பேஜ் பைல் மற்றும் ரெஜிஸ்ட்ரியைக் குறிப்பாக டிபிராக் செய்திட வேண்டும். தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும் 3.விண்டோஸ் சிஸ்டத்தினை வேகமாக இயக்கலாம். இதற்கு ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் லோட் ஆவதை தாமதப்படுத்தலாம். இலவசமாக, ஸ்டார்ட் அப் டிலேயர் (Startup Delayer) என்ற புரோகிராம் இதற்கு உதவும். பொதுவாக பல ஸ்டார்ட் அப் புரோகிராம்கள், காலப் போக்கில் நமக்குத் தேவையற்றதாக இருக்கும். இவற்றை இந்த பட்டியலில் இருந்து நீக்க msconfig என்ற கட்டளையை ரன் பாக்ஸில் இயக்கி நீக்கவும். தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும் 4. விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவில் விண்டோஸ் சர்ச் இன்டெக்ஸிங் என்ற பணி தொடர்ந்து நடைபெறும். இது நடைபெறுவதனை நிறுத்தி வைக்கலாம். அதே போல, பெர்பார்மன்ஸ் ஆப்ஷன்ஸ் பெற்று, தேவையற்ற அலங்கார விண்டோக்கள், திரைக் காட்சிகளை நீக்கலாம். இந்த வழியைப் பின்பற்றி தேவையற்ற விண்டோஸ் சர்வீஸ், செட்டிங்ஸ் மற்றும் புரோகிராம்களை நீக்கலாம். 5. விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைத் துரிதப்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் Bootvis என்னும் புரோகிராமினைத் தந்துள்ளது. அதன் தளம் சென்று இந்த புரோகிராமினை இலவசமாகப் பெற்று இயக்கவும். தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும் 6. ரெஜிஸ்ட்ரியில் பல ரெபரன்ஸ் வரிகள் தேவையற்றதாய் சில நாட்களிலேயே மாறிவிடும். இவற்றை நீக்கலாம். கவனத்துடன் இதற்கான வழிமுறைகளை மைக்ரோசாப்ட் தளத்தில் பெற்றுக் கையாளவும். 7. பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மெதுவாக இயங்குவதற்குக் காரணம், நாம் அறியாமலேயே இன்டர்நெட் வழியாக நம் கம்ப்யூட்டரை வந்தடையும் ஸ்பைவேர் புரோகிராம்களாகும். இவற்றை AdAware, Giant Antispyware, SUPER AntiSpyware போன்ற புரோகிராம் களில் ஏதேனும் ஒன்றின் துணை கொண்டு நீக்கலாம். இவை இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. இவற்றின் மூலமாகவும் நீக்க முடியாமல், ஹார்ட் டிஸ்க்கில் தங்கும் ஸ்பை வேர்களை HijackThis to remove spyware என்ற புரோகிராம் மூலம் நீக்கலாம். தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும் 8. சில சாப்ட்வேர் புரோகிராம்கள் தேவையில்லாமல், கம்ப்யூட்டருடன் சிஸ்டம் வரும்போதே பதியப்பட்டு கிடைக்கும். இவற்றை நீக்க PC Decrapifier போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும். தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும் 9. விண்டோஸ் விஸ்டா இயக்கத்தில் User Account Control என்ற புரோகிராம் தானாகவே தொடங்கி இயங்கும். இதனை நீக்குவது விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தை அதிகப்படுத்தும். இது பலருக்குத் தேவையற்ற புரோகிராம் ஆகும். 10. உங்கள் மவுஸ் செட்டிங்ஸில் கவனம் செலுத்துங்கள். அதற்கான வழிகளைச் சொல்லித் தரும் தளங்கள் இணையத்தில் உள்ளன. இதனால் வேகமாக காப்பி, பேஸ்ட், ஸ்குரோல் போன்ற செயல்களை வேகமாக மேற்கொள்ளலாம். 11. இன்டர்நெட் தேடலில், உலாவில் அநேக பைல்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டு நம் ஹார்ட் டிஸ்க்கில் அடைந்திருக்கும். பிரவுசிங் ஹிஸ்டரி, டெம்பரரி டவுண்லோட் லிங்க்குகள், குக்கீஸ் போன்றவை உருவாகும். இவற்றை சி கிளீனர் (C Cleaner) போன்ற புரோகிராம்கள் மூலம் நீக்கலாம். இது போன்ற புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கம் தொடங்கும்போதோ, முடிக்கும் போதோ இயக்குவது நல்லது. தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும் 12.விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்க அதன் லோகோ வருவதைத் தவிர்க்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்பதனை கீழுள்ள என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியவும். தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும் 13. தேவைப்படுகிறதோ இல்லையோ, அதிக எண்ணிக்கையில் எழுத்து வகைகளை (Fonts) நாம் கம்ப்யூட்டரில் சேர்த்து வைக்கிறோம். விண்டோஸ் தரும் எழுத்து வகைகளைக் கூட அனைத்தும் நாம் பயன்படுத்துவதில்லை. விண்டோஸ் இயங்கும் போது பாண்ட்ஸ் போல்டரில் உள்ள அனைத்து எழுத்து வகைகளையும் இயக்கி வைக்கிறது. எனவே இவற்றில் சிலவற்றை நீக்கி, விண்டோஸ் தொடக்கத்தில் இயக்காதபடி போட்டு வைக்கலாம். 14. குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கள் பைல்களை பேக்கப் செய்வது வழக்கம் என்றால், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்பாட்டை முடக்கி வைக்கலாம். இதனால் வேகம் கூடுதலாகும். 15. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, சிஸ்டம் பூட் ஆகும் டிரைவில் இருந்து வேறு ஒரு டிரைவில் அமைக்கலாம். 16. சில போர்ட்களை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். இவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம். 17. விஸ்டாவில் என்று ஒரு செயல்பாடு இருக்கும். இதனை நிறுத்தி வைப்பதன் மூலம் வீடியோக்களையும், படங்களையும் இணையத்தில் வேகமாக பிரவுஸ் செய்திட முடியும். 18. இன்டர்நெட் பிரவுசிங் செய்கையில் வெப் ஆக்சிலரேட்டர்களைப் பயன்படுத்தவும். இவை நீங்கள் பார்க்க இருக்கும் தளங்களை எடுத்து கேஷ் மெமரியில் வைத்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, செயல்பாட்டினை வேகப்படுத்தும். 19. நீங்கள் பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறீர்களா! இதன் செயல் வேகத்தை அதிகப்படுத்த ஆட் ஆன் புரோகிராம் ஒன்று FasterFox என்ற பெயரில் உள்ளது. அதனைப் பயன்படுத்தவும். தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும் 20. உங்கள் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகள் பல ஆகிவிட்டதா? சின்ன சின்ன வேகமாகச் செயல்படும் பாகங்களை, பழையனவற்றின் இடத்தில் இணைப்பதன் மூலம் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தலாம். |
யு.எஸ்.பி. டிரைவில் கூகிள் குரோம் ஓ.எஸ்.
குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல்கள் வந்தன. ஆனால் நாம் நெட்புக் கம்ப்யூட்டர்களிலோ அல்லது மற்றவகை கம்ப்யூட்டர்களிலோ பயன்படுத்தும் வகையில் ரெடியாக அது இன்னும் கிடைக்கவில்லை. இந்த சிஸ்டம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் சோர்ஸ் கோட் வரிகள் தான் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அண்மையில் டவுண்லோட் செய்திட உதவும் டாரண்ட் (Torrent) தளங்களில், யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து நெட்புக் கம்ப்யூட்டர்களை இயக்கக் கூடிய அளவில் குரோம் ஓ.எஸ். கிடைப்பதாக செய்திகள் வந்துள்ளன. Engadget தளத்தில் இயங்கும் சிலர், இதனைப் பெற்று Dell Vostro A90 என்ற நெட்புக் கம்ப்யூட்டரில் இயக்கியதாகத் தகவல் தரப்பட்டுள்ளது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பூட்டிங் நேரம் 22 விநாடிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். உடனே இணைய தளத்தினை பிரவுஸ் செய்வதற்கு முடிந்ததாகவும் அறிவித்துள்ளனர். ஆனால் இந்த சிஸ்டத்தில் உள்ள டிவைஸ் டிரைவர்கள் அனைத்தும் வடிவமைப்பின் தொடக்க நிலையிலேயே உள்ளதாகத் தெரிகிறது. எனவே குரோம் சிஸ்டம் இயக்கத்தில் உங்கள் கம்ப்யூட்டரின் சில பகுதிகள் எதிர்பார்க்கும் வேகத்தில் இயங்காது எனத் தெரிகிறது. நீங்களும் குரோம் ஓ.எஸ். அதிகாரப் பூர்வமாக மக்களுக்கு வழங்கப்படும் முன், அதனைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என எண்ணினால் கீழுள்ள முகவரில் டவுண்லோட் செய்யுங்கள் . பூட் செய்யக் கூடிய இமேஜை டவுண்லோட் செய்து, பிளாஷ் டிரைவில் பதிந்து, உங்கள் நெட்புக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம். விண்டோஸ், மேக், லினக்ஸ் இயக்கங்கள் உள்ள கம்ப்யூட்டரில் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்ற குறிப்புகளும் இங்கே தரப்பட்டுள்ளன. அதற்கு முன் குரோம் சிஸ்டத்தில் எவை எவை இயங்கும் என்ற பட்டியலை கூகுள் தளத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். |
புதிய வைரஸ் : எச்சரிக்கை
Koobface என்ற புதிய வைரஸ் தற்போது உருவாகி கம்ப்யூட்டர்களை பழுதாக்கி வருகிறது. சமூக உறவு இணையத்தளங்களான facebook, twitter மற்றும் my space ஆகிய தளங்களை இது அதிகமாக தாக்கி வருவதாக தெரிகிறது. Sky News தகவலின்படி face book இணையதளமே அதிகமாக பாதிப்புள்ளாகும் வாய்ப்பு இருக்கிறது. You tube இணையதளத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்து வீடியோக்களில் இந்த வைரஸ் மறைந்து இருந்து யாரேனும் அந்த வீடியோக்களை கிளிக் செய்யும்போது கம்ப்யூட்டருக்குள் ஊடுருவி 3 நிமிடத்திற்குள் ஒரு புதிரை விடுவிக்கும்படி கேட்கும். அப்படி முடியாத பட்சத்தில் கம்ப்யூட்டர் வேலை செய்வதை நிறுத்தி விடும். கம்ப்யூட்டர் பயனாளர்கள் சந்தேகத்துக்கிடமான எந்த இணைய தள முகவரியையும் கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். |
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?
சில வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy," it says. "Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications." என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம். ஹார்ட்வேர் பிரச்னை கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System => Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும். ரம் மெமரி சிப்ஸ் ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம். ஹார்ட் டிஸ்க் டிரைவ் பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம். வீடியோ கார்ட் சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும். வைரஸ் பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். பிரிண்டர் பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும். சாப்ட்வேர் முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும். அதிக வெப்பம் இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும். மின் ஓட்டம் கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கவும். |
விண்டோஸ் மீடியா ப்ளேயரில் மினி ப்ளேயர்
Windows Media Player -ல் நாம் MP3 பாடல்களை திறக்கையில், முழுத் திரையில் Windows Media Player திறப்பதை கவனித்திருக்கலாம். ஆனால் பெரும்பாலும், பாடல்களை கேட்பதற்கு முழுத் திரை தேவையில்லை என்பதால், பயனர்கள் பலரும் Mini Player தோற்றத்தையே விரும்புகிறார்கள்.ஒவ்வொருமுறையும் மினி ப்ளேயர் மோடிற்கு மாற்றுவதை விட, ஒரு குறிப்பிட்ட கோப்பு வடிவிற்கு மட்டும் (உதாரணமாக MP3) அல்லது ஒரு குறிப்பிட்ட ட்ரைவிலிருந்து திறக்கப்படும் கோப்புகளுக்கு மட்டும் (உதாரணமாக CD/DVD) நிரந்தரமாக மினி ப்ளேயர் மோடை Windows Media Player -ல் உருவாக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். Windows Media Player ஐ திறந்து கொண்டு Options பக்கத்திற்கு செல்லுங்கள். இங்கு Player டேபில் “Start the mini Player for file names that contain this text” என்ற டெக்ஸ்ட் பாக்ஸ் இருப்பதை கவனிக்கலாம். உங்களுக்கு அனைத்து எம்பி3 கோப்புகளும் மினி ப்ளேயரில் திறக்க வேண்டுமெனில் இந்த டெக்ஸ்ட் பாக்ஸில் .mp3 என டைப் செய்யவும். குறிப்பிட்ட ட்ரைவிலிருந்து திறக்கப்படும் கோப்புகள் மட்டும் மினி ப்ளேயரில் திறக்க வேண்டுமெனில் அந்த ட்ரைவ் லெட்டரை மட்டிலும் கொடுத்தால் போதுமானது. |
My Computer திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா?
நீங்கள் Windows XP இயங்குதளம் உபயோகித்துக் கொண்டிருக்கீறீர்களா? My Computer -ல் க்ளிக் செய்து வெகு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதா? இதோ உங்களுக்கான தீர்வு.., My Computer ஐ திறந்து கொண்டு அதில் உள்ள Tools மெனுவில் Folder Options வசதியை க்ளிக் செய்யுங்கள். இனி திறக்கும் Folder Options விண்டோவில் View டேபிற்குச் சென்று, அங்கு Files and Folders இற்கு கீழாக உள்ள “Automatically search for network folders and printers” என்பதற்கு நேராக உள்ள Check Box ஐ uncheck செய்து விடுங்கள். இனி My computer முன்பை விட வேகமாக திறக்கும். |
கணினியிலுள்ள தகவல்களை அழிக்கும் வைரஸ்கள்
வைரஸ் (Virus) வைரஸ்கள் பல வகைகளாக உபயோகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் இதன் பொதுவான குணமானது ஒரு கணினியில் உள்ள EXE எனப்படும் விரிவு கொண்ட புரோகிராம்களுடன் தானாகவே சென்று ஒட்டிக் கொள்ளும் திறன் கொண்டது. இது போன்று சேர்ந்து கொண்ட வைரஸ் புரோகிராமானது அந்த EXE விரிவு கொண்ட புரோகிராமை உபயோகப்படுத்தும் போது நாம் எதிர்பாரா வகையில் அந்த புரோகிராமை இயக்க முடியாத வகையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். சில வைரஸ்கள் நமது புரோகிராம்களில் உள்ள சில கரக்டர்களை வேறு சில கரக்டர்களாக மாற்றியோ அல்லது நமது புரோகிராம் வ?களை காணாமல் செய்தோ பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுவரை பல்லாயிரக்கணக்கான வைரஸ்கள் உலகில் உபயோகத்தில் இருந்து வந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த I Love You எனப்படும் வைரஸ் கணினியில் ஏற்படுத்திய பாதிப்பை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. 2. டிராஜன் ஹோர்ஸ் (Trojan Horse) இது ஒரு புது வகையான வைரஸ் ஆக கருதப்பட்டாலும் இதன் பாதிப்புகள் நாம் எதிர்பாராத வகையில் இருக்கும். ஏனென்றால் இந்த வகை வைரசானது ஒரு கணினி புரோகிராமுடன் தானாகவே சென்று ஒட்டிக் கொண்டாலும் பல நேரங்களில் எதிர்பார்க் காத சில வேலைகளைச் செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு யூசர் தனது புரோகிராமை எடுத்து அதில் சிலமாற்றங்களைச் செய்ய முற்படும்போது அந்தப் புரோகிராமை அழித்து விடும் தன்மை கொண்டது தான் இந்த டிராஜன் ஹோர்ஸ் ஆகும். இது போன்று புரோகிராம்களை அழித்து விடுவதால் யூசர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போகும் நிலை உருவாகிறது. 3. வோம் (Worm) இந்த வகை வைரஸ் ஆனது சற்று வேடிக்கையானதும் கூட. ஏனென்றால் ஒரு புரோகிராமை நாம் கொப்பி செய்யும் போது அதே போன்று அதே பெயரில் மற்றொரு புரோகிராம் ஒன்றும் உருவாகும். இந்த இரண்டு புரோகிராம்களின் அளவும் ஒரே அளவாகவே காட்டும். ஆகையால் நாம் ஏதாவது ஒன்றை அழிக்க நினைத்து புரோகிராமை அழித்து விடுவோம். அதன் பிறகு நம்மிடம் இருக்கும் அந்த மற்றொரு புரோ கிராமை எடுத்து அதில் உள்ள தகவல்களை பார்த்தோமேயானால் ஒன்றுமே இருக்காது. ஒரு புரோகிராம் வரி கூட இல்லாமல் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும். பொதுவாக ஓர் அலுவலகத்தில் கணினியை உபயோகிக்கும் ஒருவர் ஒவ்வொரு முறையும் தனது கணினியில் இருந்து Server கணினிக்கு தகவல்களை அனுப்பும் போதும் இது போன்ற வைரஸ்கள் உள்ளதா என்று சோதனையிட வேண்டும். அது போன்று சோதனையிடும் போது இது போன்ற அபாயகரமான வைரஸ் புரோகிராம்களை அழித்து விட்டு பிறகு தான் அவற்றைக் கணினியில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். |
கணிணி வேகம் அதிகரிக்க
நமது கணிணியில் நாமோ அல்லது நம் வீட்டு குட்டீசோ விளையாட Game சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்திருப்போம் இதனை கணிணி software Registery ல் அப்டேட் செய்து விடும் நாம் இந்த game விளையாட தொடங்கும் போது புதிய சில Instructions மூலம் இயங்க வைக்கும் சிலநாட்களில் அதனை Delete செய்து அடுத்த Game விளையாடுவோம் . நாம் அதனை remove செய்தாலும் அந்த instructions நமது கணினியிலேயே தங்கிவிடும். ஒவ்வொரு முறை கணிணியை இயக்கும்போதும் கணிணி இந்த instructions ஐ செயல்படுத்த முயற்சிக்கும் நாம் அந்த Software ஐ ஏற்கனவே delete செய்துவிட்டோம் எனவே அதனை கண்டுபிடிக்க முடியாது இதற்க்கு registry error என்று பெயர் . இவ்வாறு பல software நாம் பயன்படுத்தி நீக்கியிருந்தால் நமது கணிணி மேற்கூறிய செயல்களால் மெதுவாக செயல்பட தொடங்கும் .இதனை கண்டறிந்து நீக்கினாலே மீண்டும் அந்த வேகத்தை பெற்றுவிடமுடியும் . இதனை எவ்வாறு கண்டறிவது, இதனை கண்டறிந்து நீக்க எனப்படும் software உள்ளது. இதனை நிறுவி அவற்றை முழுமையாக நீக்கலாம். |
குழந்தைகளுக்கு பாதுகாப்பான சைபர் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்
சிறிய வயது உள்ள குழந்தைகள் முதல் படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் உள்ளது. முற்றிலும் வண்ணமயமாக்கப்பட்ட குழந்தைகள் விளையாடும் பிளே ஸ்டேசன் போல் உள்ளது. முதலில் இதன் ஹார்டுவேர் கான்பிக்ரேசன் பற்றி பார்ப்போம்.
இந்த டெஸ்க்டாப் கம்யூட்டருக்கு பிரிமியர் கிட்ஸ் சைபர்நெட் ஸ்டேசன் (Premier Kids Cybernet station) என்று பெயர் வைத்துள்ளனர். தண்ணீர் கீபோர்டில் பட்டால் கூட எந்த பழுதும் ஏற்படாது என்பதில் இருந்து மானிட்டரை தொட்டு இன்புட் கொடுக்கலாம் என்பதுவரை அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமாக தான் உள்ளது. இண்டெர்நெட்டில் ஆபாச இணையதளங்களை தடுக்கும் மென்பொருளும் எந்த வைரஸும் கம்யூட்டரை தாக்காத வண்ணம் உள்ள மென்பொருள்களையும் வடிவமைத்துள்ளனர். இதனுடன் குழந்தைகள் அறிவை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான பேக்கேஸும் சேர்த்தே கொடுக்கின்றனர் இதில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த டொட்லர் என்று முதல் பேக்கேஸ். இரண்டாவது 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த கைண்டர்கெர்டன் என்ற பேக்கேஸ்.மூன்றாவதாக 11 முதல் 15 வயது வரை உள்ள தொடக்க மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கான பேக்கேஸும் உள்ளது. இத்தனை வசதிகளும் உள்ள இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் விலை கொஞ்சம் அதிகம் தான் இதன் விலை $1999 அமெரிக்க டாலர். |
பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க
என்னதான் பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாத்தாலும், சில ஹேக்கர்கள் பாஸ்வேர்ட்களைக் கண்டறிந்து, திருடுவதிலும், நாசம் செய்வதிலும் கில்லாடிகளாக இருக்கிறார்கள். இவ்வாறு பாஸ்வேர்ட் திருடப்பட்ட கம்ப்யூட்டர் களை ஆய்வு செய்த போது மிகவும் பிரபலமான பாஸ்வேர்ட் ஒன்று பெரும்பா லானவர்களால் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. அந்த பாஸ்வேர்ட் 1234356. 3 கோடியே 20 லட்சம் திருடப்பட்ட பாஸ்வேர்ட்களை ஆய்வு செய்திடுகையில் இந்த தகவல் தெரிய வந்தது. பாஸ்வேர்டை நினைவு வைப்பதில் உள்ள சோம்பேறித்தனமும், அதனை எளிதாக டைப் செய்திட வேண்டும் என்கிற ஆசையுமே இந்த பாஸ்வேர்டைப் பலர் பயன்படுத்த இடம் அளித்துள்ளது. பொதுவாக சிறிய பாஸ்வேர்ட்கள், சிறிய பெரிய எழுத்துக்களையும் எண்களையும் கலந்திடாத பாஸ்வேர்ட், டிக்ஷனரியில் உள்ள சிறிய சாதாரண சொற்கள் ஆகியவை பாஸ்வேர்ட்களாக இருந்தால் ஹேக்கர்கள் மிக எளிதாக அவற்றைக் கண்டறிந்து விடுகின்றனர். இந்த ஆய்வில் இன்னும் சில ஆர்வமூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. 110 முறை முயற்சி செய்தால், நிச்சயம் ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு பாஸ்வேர்டைக் கண்டறியலாம். ஆயிரம் அக்கவுண்ட்களை உடைத்தெறிய ஒருவருக்கு 17 நிமிடங்களே ஆயின. கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் 30% பேர் மிகச் சிறிய, ஆறு எழுத்துக்களுக்கும் குறைவாக, பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்துகின்றனர். 60 சதவீதம் பேர் பயன்படுத்தும் எழுத்துக்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. 50 சதவீதம் பேர் பெயர்கள், வழக்குச் சொற்கள், அகராதியில் உள்ள சில குறிப்பிட்ட சொற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். இதனால் தான் ட்விட்டர் போன்ற தளங்கள் நூற்றுக் கணக்கான சொற்களை, பாஸ்வேர்ட்களாகப் பயன்படுத்தக் கூடாது எனத் தடைவிதித்துள்ளது. |
இலங்கை தினக்குரல் பத்திரிக்கையில் நபிகள் நாயகத்தின் உருவப்படும்: இலங்கை முஸ்லிம்கள் கொந்தெளிப்பு!
உலக முஸ்லீம்கள் உயிரிலும் மேலாக மதிக்கக் கூடிய நபி(ஸல்) அவாகளின் உருவப்படத்தை வரைவதின் மூலமாக சில விஷமிகள் உலகம் மூழுவதும் உள்ள முஸ்லிம்களின் உணாவுகளை சீண்டிப் பாப்பது அண்மைக் காலமாக அதிகாத்து வருகிறது.
கிட்டத் தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னால் டென்மாக்கிலிருந்து வௌவரும் ஜூலியன் போஸ்டா என்ற பத்திரிக்கை நபி(ஸல்)அவாகளை தீவிரவாதியாக சித்தரித்து சில புகைப்படங்களை வௌயிட்டது.
அப்போது உலக முஸ்லீம்கள் அனைவரும் கொதித்தெழுந்து அதற்கெதிராக கொடி ஏந்தியதின் விளைவாக அந்தப் பத்திக்கையை டென்மாக் அரசு தடை செய்தது.
பல அரபு நாடுகள் டென்மாக்கின் ஏற்றுமதிப் பொருட்களையும் தடை செய்தது.
அதைத் தொடாந்து தமிழ் நாட்டிலிருந்து வெளியாகும் தினமலர் என்ற பத்திக்கை நபியவாகளின் உருவப் படத்தை வரைந்தது.
இதற்கும் இந்திய அளவிலும் மற்றும் உலகம் மூலுவதும் உள்ள அனைத்து முஸ்லீம்களும் எதிப்புத் தொவித்ததால் தினமலா பத்திக்கை உலக முஸ்லீம்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டது.
இந்த வாசையில் தற்போது இலங்கையில் இருந்து வௌயாகும் தினக் குரல் என்ற பத்திக்கையில் கடந்த 24ம் தேதி செவ்வாய்க் கிழமை வௌயான சிறுவாகளுக்கான ஜூனியா ஸ்டா என்ற ஆங்கிலப் பதிப்பில் நபிகள் நாயகத்தைப் பற்றி ஒரு சிறுமி எழுதிய கட்டுரையின் பக்கத்தில் தலையில் தலைப் பாகை அணிந்துகையில் வாளுடன் நபிகள் நாயகம் நிற்பதைப் போன்று காட்சி தரக் கூடிய ஒரு புகைப்படத்தை வௌயிட்டு உலக முஸ்லீம்களின் உணாச்சிகளை சீண்டிப் பாத்திருக்கிறது.
இந்த விஷமச் செயல் இலங்கை முஸ்லிம்களிடையே பெரும் கொந்தௌப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் இதற்கு கடும் கண்டம் தெரிவித்ததோடு தினக்குரல் பத்திரிக்கை இதற்கு பகிரங்க மன்னிப்பு கோராவிட்டால் பத்திரிக்கையின் மீது நீதிமன்ற வழக் தொடரவு தினக்குரல் பத்திரிக்கையை நாடுமுழுவதும் புறக்கணிக்கவும் தீர்மாணித்துள்ளது.
இந்த சமூக வீரோத செயலுக்கு தினக்குரல் பத்திரிக்கை பகிரங்கமாக மன்னிப் கோரவில்லை எனில் உலக முஸ்லிம்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பிற்கு ஆளாக வெண்டியிருக்கும…
அமொக்காவில் மரியாதை நிமித்தமாக நபிகள் நாயகத்திற்கு சிலை வைக்க அமொக்க அரசு முடிவெடுத்ததற்கே நபிகள் நாயகத்திற்கு எக்காரணம் கொண்டும் சிலை வைக்கக் கூடாது என எதித்தவாகள் முஸ்லீம்கள். உலகில் தோண்றிய எத்தனையோ ஆண்மீகவாதிகளுக்கு சிலைகளும்சிற்பங்களும் நிருவப்பட்டுள்ளது.
ஆனால் 1400 வருடங்கள் தாண்டியும் உருவப்படமே இல்லாமல் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கும் ஒரே தலைவா நபி(ஸல்) அவாகள் மாத்திரம் தான்.ஏன் எனில் அவா இறைவனின் தூதாஅவா இவ்வுலகுக்கு எடுத்துச் சொன்ன சித்தாந்தமே அல்லாஹ் மாத்திரம் தான் இந்த அகிலத்தின் கடவுல் அவன் அல்லாத யாரையும் வணங்கக் கூடாது. சிலை வணக்கம் என்பது இஸ்லாமிய மாக்கத்தில் கிடையாது.
இப்படிப் பட்ட தூய்மையான காள்கையைச் சொன்ன தலைவா முஹம்மத்(ஸல்)அவாகள்.அவாகளுக்கு ஒருவன் சிலை வைத்தாலோஅல்லது உருவம் வரைந்தாலோ எந்த ஒரு முஸ்லிமும் அதை சகித்துக் கொள்ள மாட்டான்.
அவசர காலத்தில் இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்த தானம் செய்வோரை தேடித்தரும் இலவச இணையதளம்
சவுதியில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது
சவூதி அரேபியாவில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை 60 லட்சம் பேர்களாக உயர்ந்துள்ளது. அவற்றுள் 6 லட்சம் பேர் பெண்கள் என்பதும், 7.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நடுநிலை / மேல் நிலைப் பள்ளிகளில் படிக்கும் டீன்ஏஜ் சிறுவர்/சிறுமியர்களும் ஆவர்.
இத்தகவலை புகைப்பழக்கத் தடுப்பு அமைப்பின் இயக்குநர் நாயிஃப் அல் சயீத் வெளியிட்டுள்ளார்.
புகைபிடிப்பவர்கள் எண்ணிக்கையில் 10 சதவீதம் பேர் பெண்கள் என்பதும், 13 சதவீதம் பேர் டீன்ஏஜ் வயதினர் என்பதும் மிகவும் கவலைக்குரிய விஷயம்.
இந்நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் இடையே புகைப்பழக்கத்திற்கு எதிராக பிரசாரத்தை ஜெத்தா ஆளுநர் இளவரசர் மிஷால் இப்னு மஜீது துவக்கி வைக்க இருக்கின்றார். புகை மற்றும் போதை மருந்துகளால் விலையும் ஆபத்துகள் இந்த பிரசாரம் மூலம் விளக்கப்படும்.
உலகிலேயே சிகரெட்டுகளை இறக்குமதி செய்வதில் சவூதி அரேபியா நான்காவது இடத்தை வகிக்கின்றது. வேலை செய்யும் இடங்களில் புகைப்பிடிப்பவர்களால், அருகிலுள்ள புகை பிடிக்காதவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கானோர் வருடந்தோறும் இறக்கின்றனர் என சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. மேலும், 98 சதவீதம் மக்கள் பணிபுரியும் இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பன்றிக் காய்ச்சல் வராமல் இருக்க என்ன வழி???? H1N1 (Influenza A)…
இன்ஷா அல்லாஹ்… இதைப்பற்றி முக்கியமான தகவல்களையும் அதிலிருந்து எப்படி காத்துக்கொள்வது என்பதை இந்தக்கட்டுரையில் பகிர்ந்து கொள்வோம்.
இதில் இடம் பெரும் தகவல்கள் உலக சுகாதார நிறுவனம் மான WHO விடமிருந்து பேறப்பட்டவையாகும்.
இன்றைய சூழலில் இதைப்பற்றி ஆராய்வதற்கு முன் இதிலிருந்து எப்படி நம்மை காத்துக்கொல்லாம் என்பதே முக்கியமாகும். எனினும் சிறு குறிப்பை அறிவது அவசியம் (இன்ஷா அல்லாஹ் தேவைப்பட்டால் இதைப்பற்றி மிக நீளமான கட்டுரை ஒன்றை பிறகு பகிர்ந்து கொள்வோம்).
இது முதன்முதலில் அமெரிக்க நாட்டில் இரு குழந்தைகளுக்கு இருப்பதாக மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்டது எனினும் இந்த நோயின் மூலம் மெக்சிகோ நாடு என்பதாகவே சொல்லப்படுகிறது (பார்க்க [6]). இது பன்றிப்பன்னையிலிருந்து தொற்றியதாகவே அறியப்படுகிறது. இந்த நோய் முதலில் அதிகம் பாதித்தது மெக்சிகோ நாட்டையே, அதன் பிறகு அமெரிக்க அதிகம் பாதிக்கப்பட்டது. இங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு பரவியதாக நம்பப்படுகிறது. இன்றோடு இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் இரு லட்சம் ( approx. 1,87,830 – மேலும் உடனுக்குடனான தகவல்களுக்கு பார்க்க [5]).
இது மனிதக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்ற நான்கு தாக்குதல் கிருமிகள் சேர்ந்ததாக புதுவகையான தாக்குதல் கிருமியாக தற்போதய ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டுள்ளது (பார்க்க [6]) . இது சுவசத்துளிகள் மூலமாக மனிதர்களுக்குள் பரவுவதாக அறியப்படுகிறது (பார்க்க [7-8]). இதற்கு மருந்துகள் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டதாக தெரியவில்லை (பார்க்க [7]), எனினும் சில நிறுவனங்கள் தாங்கள் மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறி வருகின்றன (பார்க்க [2]). தற்போது Oseltamivir Or Zanamivir என்ற ஆண்டி-வைரல் மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது (பார்க்க [7]) மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு டாமிபளு (Tamiflu) மருந்து பயன்படுத்தப்படுகிறது (பார்க்க [1]).
இது குழைந்தைகளை அதிகமாக பாதிக்க கூடியதாக உள்ளது. வயதானவர்களுக்கும் அதிகம் பாதிப்பை உண்டு பண்ணக்கூடியதாக உள்ளது. மேலும் இந்நோய் ஆஸ்த்மா, உடல் பருமனானவர்கள், நுரை ஈரல், கிட்னி, ஈரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இது பரவ அதிக வாய்ப்புள்ளது (பார்க்க [3]). இந்தக்கிருமியின் பாதிப்பு ஆரம்பத்தில் அவ்வளவாக தெரியாது, சாதரண காய்ச்சல், ஜல தோசம், உடல் வலி, வயிற்று வலி போன்று தான் இருக்கும். இதற்க்கு இதுவரை தடுப்பு மருந்துகளும் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரியவில்லை (தடுப்பு மருந்துகள் இல்லை எனவே கூறலாம் – பார்க்க [7]).
இப்படிப்பட்ட நோயின் அறிகுறி அதிலிருந்து எப்படி காத்துக்கொள்வது என்பதை இன்ஷா அல்லாஹ் இப்போது பாப்போம் (இது உலக சுகாதார அமைப்பின் இனைய தளத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது –
நோயின் அறிகுறி:
* சாதரண நோய்க்கும் H1N1 க்கும் வித்தியாசம் காண முடியாது.
பொதுவான அறிகுறிகள்:
* காய்ச்சல், இருமல், தலை வலி, உடல் வலி, தொண்டை வலி மற்றும் அரிப்பு, மூக்கொழுகுதல்.
மருத்துவ நிபுணர்கள் மட்டுமே இந்த நோயை உறுதிப்படுத்த முடியும்.
நோயிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது:
* அதிகமதிகமாக துஆ செய்து இறைவனிடம் பாதுகாப்பு தேடுங்கள்.
* இந்த நோயின் அறிகுறி தெரிபவரிடம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்கவும்
* மூக்கையும் வாயையும் தொடுவதைக் கட்டுப்படுத்திக்கொள்ளவும்
* கை சுத்தத்தை பேணவும், சோப்பு போட்டு அடிக்கடி கையை கழுவவும் (கையை எவ்வாறு கழுவுவ வேண்டும் என்பதை பட விளக்கத்துடன் உலக சுகாதார நிறுவன ஆவணத்தைப்பார்க்கவும் – பார்க்க [9])
* உடல் நலம் குன்றியவர்களிடம் நெருங்கிய தொடர்பைத்தவிர்க்கவும்
* கூட்டமான இடங்களில் நிற்பதைத்தவிர்க்கவும்
* உங்கள் இருப்பிடத்தை காற்றோட்டமானதாக ஆக்கிக்கொள்ளவும்
உங்களுக்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டால்:
* வீட்டிலேயே இருக்கவும்
* ஓய்வெடுக்கவும், அதிகமாக நீராகாரம் அருந்தவும்
* தும்மும்போதும் இருமும்போதும் மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளவும், நீங்கள் கைக்குட்டையோ அல்லது அது போன்ற ஒன்றை தும்மும்போது பயன்படுத்தினால் அதை கண்ட இடங்களில் போடாமல், மற்றவர்களுக்கு பாதிப்பில்லாமல் அப்புறப்படுத்தவும்.
* முகமூடி அணிந்து கொள்ளவும்
* உறவினர் மற்றும் நண்பர்களிடம் தெரியப்படுத்தி அவர்களிடம் சற்று நெருங்கிய தொடர்பை தவிர்ப்பதன் மூலம் அவர்களுக்குப்பரவுவதைத் தவிர்க்கலாம்.
முக்கியமாக தவறாக நம்பிக்கை நம் மக்களிடையே காணப்படுகின்றது, N95 மற்றும் சில வகை முகமூடிகள் அணிவதால் இந்நோயிலிருந்து தப்பிக்கலாம் என்று, இது ஒரு தவறான நம்பிக்கை (பார்க்க [4]). உங்களுக்கு இந்நோய் இருந்து இது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க இதைப்பயன் படுத்தவும்.
எல்லாம் வல்ல அர்ரஹ்மான் இந்நோயிலிருந்து அணைத்து மக்களையும் காப்பாற்றி அருள்வானாக,
References:
[1] WHO recommends Tamiflu in ’severe’ swine flu treatment, AFP: http://www.google.com/hostednews/afp/article/ALeqM5gHsIlKD0CynlBXAg2wpltiGfm6Qg
[2] Cipla : http://www.xomba.com/cipla_has_launched_new_drug_against_swine_flu_where_virenza_available
[3] Independent: What you need to know about H1N1, http://www.independent.ie/health/swine-flu/what-you-need-to-know-about-h1n1-1855513.html
[4] Myth Busted: N95 Masks Are Useless at Protecting Wearers from Swine Flu, http://www.naturalnews.com/026160_preparedness_swine_flu_outbreak.html
[5] TheAirDB: http://www.theairdb.com/swine-flu/heatmap.html
[6] Wikipedia: http://en.wikipedia.org/wiki/2009_flu_pandemic
[7] World Health Organization: http://www.who.int/csr/disease/swineflu/frequently_asked_questions/what/en/index.html
[8] World Health Organization: http://www.who.int/csr/resources/publications/Adviceusemaskscommunityrevised.pdf
[9] World Health Organization: http://www.who.int/gpsc/5may/How_To_HandWash_Poster.pdf
NOW வந்து விட்டது வயர் இல்லா (wireless) எலக்ட்ரிசிட்டி
60W உள்ள ஒரு மின்குமிழை 7 அடி தூரத்திலுள்ள ஒரு மின்சாதனத்திலிருந்து காற்று மூலமாக மின்னைப்பாய்ச்சி அதை பிரகாசமாக ஒளிரவும் செய்துள்ளனர். இவ்வாறு காற்றினூடு மின்னைப் பாய்ச்சுவதற்கு ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
வாயால சத்தம்போட்டு ஒரு கண்ணாடிக் குவளையை உடைக்கலாம் என்பது எல்லோருக்கும் தெரியும். நாம் போடும் சப்தத்தின் அதிர்வெண்ணும், அந்தக் கண்ணாடிக்கவளைக்கு இருக்கின்ற அதிர்வெண்ணும் சமமா இருக்கும் போது இது நடைபெறும்.
இதை ஆங்கிலத்தில் Resonance என்று குறிப்பிடுவர். இதை தான் இங்கேயும் பயன்படுத்துகின்றனர்.
இரண்டு ஒரே மாதிரியான செப்புச் சுருள்களை எடுத்துக் கொண்டு. அதில ஒன்றை மின் சாதனத்திலயும், மற்றோன்றை மின்னோட தொடுத்து சுற்றிலும் பொருத்துகின்றனர்.
அது மின்னை மின்காந்த அலை வடிவில காத்தில பரவச்செய்கின்றது. அந்த அதிர்வெண்ணும், மின்சாரத்தில் இருக்கின்ற செப்புச் சுருளின் அதிர்வெண்ணும் சமமாக வரும் போது இரண்டு செப்புச் சுருளுக்கும் இடையில மின் காற்றினுடு பாய ஆம்பின்றது.
எதிர்காலத்தில இதப் பயன்படுத்தி, விண்ணில இருக்கிற Satelliteல இருந்து சூரியனோட ஒளியில இருந்து மின் எடுத்து பூமிக்கு அனுப்பலாம். சந்திரனில இருந்தும் மின் எடுக்கலாம் என கூறப்படுகின்றது.
இவ்வாறு மின்காந்த அலைகளை வளியினூடு கடத்தும்போது அதனால் மனிதனுக்கோ, ஏனய உயிரினங்களுக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாது. இதுதொடர்பான மேலதிக தகவல்கள் அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.
சூரியனை விட 35 மடங்கு அதிக வெப்பம் கொண்ட நட்சத்திரம் கண்டுபிடிப்பு!
பூமியில் இருந்து 3500 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இந்த சூடான நட்சத்திரம் உள்ளது. இது 2 லட்சம் டிகிரி வெப்பத்தை உமிழ்ந்து கொண்டிருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள் இதை தங்களது ஹபிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் கண்டறிந்துள்ள, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வான ஆராய்ச்சியாளர்கள்.
Tab and window shortcuts
Ctrl+T Opens a new tab.
Ctrl+Shift+N Opens a new window in incognito mode.
Press Ctrl+O, then select file. Opens a file from your computer in Google Chrome.
Press Ctrl and click a link. Or click a link with your middle mouse button (or mousewheel). Opens the link in a new tab in the background .
Press Ctrl+Shift and click a link. Or press Shift and click a link with your middle mouse button (or mousewheel). Opens the link in a new tab and switches to the newly opened tab.
Press Shift and click a link. Opens the link in a new window.
Ctrl+Shift+T Reopens the last tab you've closed. Google Chrome remembers the last 10 tabs you've closed.
Drag a link to a tab. Opens the link in the tab.
Drag a link to a blank area on the tab strip. Opens the link in a new tab.
Drag a tab out of the tab strip. Opens the tab in a new window.
Drag a tab out of the tab strip and into an existing window. Opens the tab in the existing window.
Press Esc while dragging a tab. Returns the tab to its orginal position.
Ctrl+1 through Ctrl+8 Switches to the tab at the specified position number on the tab strip.
Ctrl+9 Switches to the last tab.
Ctrl+Tab or Ctrl+PgDown Switches to the next tab.
Ctrl+Shift+Tab or Ctrl+PgUp Switches to the previous tab.
Alt+F4 Closes the current window.
Ctrl+W or Ctrl+F4 Closes the current tab or pop-up.
Click a tab with your middle mouse button (or mousewheel). Closes the tab you clicked.
Right-click, or click and hold either the Back or Forward arrow in the browser toolbar. Displays your browsing history in the tab.
Press Backspace, or Alt and the left arrow together. Goes to the previous page in your browsing history for the tab.
Press Shift+Backspace, or Alt and the right arrow together. Goes to the next page in your browsing history for the tab.
Press Ctrl and click either the Back arrow, Forward arrow, or Go button in the toolbar. Or click either button with your middle mouse button (or mousewheel). Opens the button destination in a new tab in the background.
Double-click the blank area on the tab strip. Maximizes the window.
Alt+Home Opens your homepage in your current window.
Google Chrome feature shortcuts
Ctrl+B Toggles the bookmarks bar on and off.
Ctrl+Shift+B Opens the Bookmark manager.
Ctrl+H Opens the History page.
Ctrl+J Opens the Downloads page.
Shift+Esc Opens the Task Manager.
Shift+Alt+T Sets the focus on the browser toolbar. Use right and left arrows on the keyboard to navigate to different buttons on the toolbar.
Ctrl+Shift+J Opens Developer Tools.
Ctrl+Shift+Delete Opens the Clear Browsing Data dialog.
F1 Opens the Help Center in a new tab (our favorite).
Address bar shortcuts
Use the following shortcuts in the address bar:
Type a search term, then press Enter. Performs a search using your default search engine.
Type a search engine keyword, press Space, type a search term, and press Enter. Performs a search using the search engine associated with the keyword.
Begin typing a search engine URL, press Tab when prompted, type a search term, and press Enter. Performs a search using the search engine associated with the URL.
Ctrl+Enter Adds www. and .com to your input in the address bar and open the resulting URL.
Type a URL, then press Alt+Enter. Opens the URL in a new tab.
F6 or Ctrl+L or Alt+D Highlights the URL.
Ctrl+K or Ctrl+E Places a '?' in the address bar. Type a search term after the question mark to perform a search using your default search engine.
Press Ctrl and the left arrow together. Moves your cursor to the preceding key term in the address bar
Press Ctrl and the right arrow together. Moves your cursor to the next key term in the address bar
Ctrl+Backspace Deletes the key term that precedes your cursor in the address bar
Select an entry in the address bar drop-down menu with your keyboard arrows, then press Shift+Delete. Deletes the entry from your browsing history, if possible.
Click an entry in the address bar drop-down menu with your middle mouse button (or mousewheel). Opens the entry in a new tab in the background.
Press Page Up or Page Down when the address bar drop-down menu is visible. Selects the first or last entry in the drop-down menu.
Webpage shortcuts
Ctrl+P Prints your current page.
Ctrl+S Saves your current page.
F5 or Ctrl+R Reloads your current page.
Esc Stops the loading of your current page.
Ctrl+F Opens the find bar.
Ctrl+G or F3 Finds the next match for your input in the find bar.
Ctrl+Shift+G, Shift+F3, or Shift+Enter Finds the previous match for your input in the find bar.
Click the middle mouse button (or mousewheel). Activates auto-scrolling. As you move your mouse, the page automatically scrolls according to the direction of the mouse.
Ctrl+F5 or Shift+F5 Reloads your current page, ignoring cached content.
Press Alt and click a link. Downloads the target of the link.
Ctrl+U Opens the source of your current page.
Drag a link to bookmarks bar Bookmarks the link.
Ctrl+D Bookmarks your current webpage.
F11 Opens your page in full-screen mode. Press F11 again to exit full-screen.
Ctrl and +, or press Ctrl and scroll your mousewheel up. Enlarges everything on the page.
Ctrl and -, or press Ctrl and scroll your mousewheel down. Makes everything on the page smaller.
Ctrl+0 Returns everything on the page to normal size.
Space bar Scrolls down the web page.
Home Goes to the top of the page.
End Goes to the bottom of the page.
Press Shift and scroll your mousewheel. Scrolls horizontally on the page.
Text shortcuts
Ctrl+C Copies highlighted content to the clipboard.
Ctrl+V or Shift+Insert Pastes content from the clipboard.
Ctrl+Shift+V Paste content from the clipboard without formatting.
Ctrl+X or Shift+Delete Deletes the highlighted content and copies it to the clipboard.
Mac shortcuts