>>>Online IT Solutions and IT Professional Services & Support <<<<அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம் தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
February 14, 2010
சவுதியில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது
சவூதி அரேபியாவில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை 60 லட்சம் பேர்களாக உயர்ந்துள்ளது. அவற்றுள் 6 லட்சம் பேர் பெண்கள் என்பதும், 7.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நடுநிலை / மேல் நிலைப் பள்ளிகளில் படிக்கும் டீன்ஏஜ் சிறுவர்/சிறுமியர்களும் ஆவர்.
இத்தகவலை புகைப்பழக்கத் தடுப்பு அமைப்பின் இயக்குநர் நாயிஃப் அல் சயீத் வெளியிட்டுள்ளார்.
புகைபிடிப்பவர்கள் எண்ணிக்கையில் 10 சதவீதம் பேர் பெண்கள் என்பதும், 13 சதவீதம் பேர் டீன்ஏஜ் வயதினர் என்பதும் மிகவும் கவலைக்குரிய விஷயம்.
இந்நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் இடையே புகைப்பழக்கத்திற்கு எதிராக பிரசாரத்தை ஜெத்தா ஆளுநர் இளவரசர் மிஷால் இப்னு மஜீது துவக்கி வைக்க இருக்கின்றார். புகை மற்றும் போதை மருந்துகளால் விலையும் ஆபத்துகள் இந்த பிரசாரம் மூலம் விளக்கப்படும்.
உலகிலேயே சிகரெட்டுகளை இறக்குமதி செய்வதில் சவூதி அரேபியா நான்காவது இடத்தை வகிக்கின்றது. வேலை செய்யும் இடங்களில் புகைப்பிடிப்பவர்களால், அருகிலுள்ள புகை பிடிக்காதவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கானோர் வருடந்தோறும் இறக்கின்றனர் என சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. மேலும், 98 சதவீதம் மக்கள் பணிபுரியும் இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
இந்த பதிவு பயனுள்ளது என கருதியினால் இது மேலும் பலருக்கு பயனளிக்க வேண்டும் என கருதினால் கீழே சென்று வாக்களிக்கவும்...says something like