சிறிய வயது உள்ள குழந்தைகள் முதல் படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் உள்ளது. முற்றிலும் வண்ணமயமாக்கப்பட்ட குழந்தைகள் விளையாடும் பிளே ஸ்டேசன் போல் உள்ளது. முதலில் இதன் ஹார்டுவேர் கான்பிக்ரேசன் பற்றி பார்ப்போம்.
இந்த டெஸ்க்டாப் கம்யூட்டருக்கு பிரிமியர் கிட்ஸ் சைபர்நெட் ஸ்டேசன் (Premier Kids Cybernet station) என்று பெயர் வைத்துள்ளனர். தண்ணீர் கீபோர்டில் பட்டால் கூட எந்த பழுதும் ஏற்படாது என்பதில் இருந்து மானிட்டரை தொட்டு இன்புட் கொடுக்கலாம் என்பதுவரை அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமாக தான் உள்ளது. இண்டெர்நெட்டில் ஆபாச இணையதளங்களை தடுக்கும் மென்பொருளும் எந்த வைரஸும் கம்யூட்டரை தாக்காத வண்ணம் உள்ள மென்பொருள்களையும் வடிவமைத்துள்ளனர். இதனுடன் குழந்தைகள் அறிவை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான பேக்கேஸும் சேர்த்தே கொடுக்கின்றனர் இதில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த டொட்லர் என்று முதல் பேக்கேஸ். இரண்டாவது 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த கைண்டர்கெர்டன் என்ற பேக்கேஸ்.மூன்றாவதாக 11 முதல் 15 வயது வரை உள்ள தொடக்க மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கான பேக்கேஸும் உள்ளது. இத்தனை வசதிகளும் உள்ள இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் விலை கொஞ்சம் அதிகம் தான் இதன் விலை $1999 அமெரிக்க டாலர். |
>>>Online IT Solutions and IT Professional Services & Support <<<<அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம் தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
February 14, 2010
குழந்தைகளுக்கு பாதுகாப்பான சைபர் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
இந்த பதிவு பயனுள்ளது என கருதியினால் இது மேலும் பலருக்கு பயனளிக்க வேண்டும் என கருதினால் கீழே சென்று வாக்களிக்கவும்...says something like