February 24, 2010

மரணத்தை நினைத்துப்பார்!

கட்டை கட்டையாய்
ஒட்டுத்துணியுடன்
ஓயாது உலாவருகின்ற
இளைஞர் சமுதாயமே! – ஒரு கணம்
மண்ணறை எனும் படு குழியை நினைத்துப்பார்!

பாசமெனும் பள்ளியறைக்குள்
நேசம் எனும் நெருக்கத்தினால்
மானமென்றும் மரியாதை என்றும் மறக்கின்ற
மாந்தர்களின் மண்ணறையை நினைத்துப்பார்!

நித்திரையின்றி நித்தம் நித்தம்
நெருங்க முடியா சத்தம் சத்தம்
வீடு எனும் தேட்டருக்குள் காட்டுகின்ற கட்டம் -அது
மண்ணறையை மறந்த பெண்களின் மச்சம்.

நாகரீகம் எனும் நாசத்தினால்
நாள் தோறும் வரும் வேசத்தினால்
காதல் என்று கைகோர்த்து – இது
மண்ணறையை மறந்தவர்களின் காத்திருப்பு.

மார்க்கத்தில் மந்தைகளாக
உலகத்தில் உத்தமராக
உலா வருகின்ற இளைஞர்களே!
மண்ணறை எனும் படுகுழியை நினைத்துப்பார்!

மதுவுக்குள் மாட்டி
தினந்தோறும் அதில் மூழ்கி
முதுமை எனும் முதுகு உணர்த்தினால் மார்க்கத்தை மறந்த
மடையர்களின் மண்ணறையை நினைத்துப்பார்!

ஆடையில் ஆரறை குறைப்பு
அதில் ஓரிரை மறைவு
பாரினில் பாழடைந்தவர்களின் நடிப்பு – இது
மண்ணறை எனும் படுகுழியை மறந்தவர்களின் நினைப்பு!

இளைஞர் கூட்டமே!
இரும்புக்கோட்டையினுல் இருந்தாலும்
இருப்பைக் காவுகொள்ளும் கொடூரம் நிறைந்த
மரணத்தை மறந்து வாழ்வின் அர்த்தத்தை இழந்துவிடாதே!
மரணத்தை நினைத்துப்பார்!

No comments:

Post a Comment

இந்த பதிவு பயனுள்ளது என கருதியினால் இது மேலும் பலருக்கு பயனளிக்க வேண்டும் என கருதினால் கீழே சென்று வாக்களிக்கவும்...says something like