என்னதான் பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாத்தாலும், சில ஹேக்கர்கள் பாஸ்வேர்ட்களைக் கண்டறிந்து, திருடுவதிலும், நாசம் செய்வதிலும் கில்லாடிகளாக இருக்கிறார்கள். இவ்வாறு பாஸ்வேர்ட் திருடப்பட்ட கம்ப்யூட்டர் களை ஆய்வு செய்த போது மிகவும் பிரபலமான பாஸ்வேர்ட் ஒன்று பெரும்பா லானவர்களால் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. அந்த பாஸ்வேர்ட் 1234356. 3 கோடியே 20 லட்சம் திருடப்பட்ட பாஸ்வேர்ட்களை ஆய்வு செய்திடுகையில் இந்த தகவல் தெரிய வந்தது. பாஸ்வேர்டை நினைவு வைப்பதில் உள்ள சோம்பேறித்தனமும், அதனை எளிதாக டைப் செய்திட வேண்டும் என்கிற ஆசையுமே இந்த பாஸ்வேர்டைப் பலர் பயன்படுத்த இடம் அளித்துள்ளது. பொதுவாக சிறிய பாஸ்வேர்ட்கள், சிறிய பெரிய எழுத்துக்களையும் எண்களையும் கலந்திடாத பாஸ்வேர்ட், டிக்ஷனரியில் உள்ள சிறிய சாதாரண சொற்கள் ஆகியவை பாஸ்வேர்ட்களாக இருந்தால் ஹேக்கர்கள் மிக எளிதாக அவற்றைக் கண்டறிந்து விடுகின்றனர். இந்த ஆய்வில் இன்னும் சில ஆர்வமூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. 110 முறை முயற்சி செய்தால், நிச்சயம் ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு பாஸ்வேர்டைக் கண்டறியலாம். ஆயிரம் அக்கவுண்ட்களை உடைத்தெறிய ஒருவருக்கு 17 நிமிடங்களே ஆயின. கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் 30% பேர் மிகச் சிறிய, ஆறு எழுத்துக்களுக்கும் குறைவாக, பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்துகின்றனர். 60 சதவீதம் பேர் பயன்படுத்தும் எழுத்துக்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. 50 சதவீதம் பேர் பெயர்கள், வழக்குச் சொற்கள், அகராதியில் உள்ள சில குறிப்பிட்ட சொற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். இதனால் தான் ட்விட்டர் போன்ற தளங்கள் நூற்றுக் கணக்கான சொற்களை, பாஸ்வேர்ட்களாகப் பயன்படுத்தக் கூடாது எனத் தடைவிதித்துள்ளது. |
>>>Online IT Solutions and IT Professional Services & Support <<<<அன்பார்ந்த நண்பர்களே ! இந்த தளம் தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி
February 14, 2010
பாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
இந்த பதிவு பயனுள்ளது என கருதியினால் இது மேலும் பலருக்கு பயனளிக்க வேண்டும் என கருதினால் கீழே சென்று வாக்களிக்கவும்...says something like